RTE 25 % கல்வி கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....
RTE 25 % கல்வி கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், திட்ட இயக்குனர் சர்வ சிகிட்சா அபியான். SSA, தனியார் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்
தமிழகத்தில் சுயநிதி அடிப்படையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நர்சரி ,பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் அரசின் பெரும் பணச்சுமையை குறைத்து லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தரமான கல்வி தந்து தமிழ்நாட்டை உயர்த்தி அரசுக்கு பல்வேறு வகையான வரிகளை செலுத்தி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு தரவேண்டிய கல்வி கட்டண நிலுவைத் தொகையை வழங்கிட கடந்த 03.12.2025 அன்று அரசாணை வெளியிட்டு தனியார் பள்ளிகள் வயிற்றில் பாலை வார்த்திட்ட தமிழக அரசுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றோம்...
RTE நிலுவைத் தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்கிட ஆணை வெளியிட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த தொகை பள்ளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததால் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி உள்ளார்கள்....
குறிப்பாக நர்சரி பிரைமரி பள்ளிகள் வாங்கிய கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட முடியாமல்.. கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல்... ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இப்படி பள்ளி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்...
மேற்கண்ட நிலுவைத் தொகை அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் உதவும்...
எனவே தயவு செய்து இனியும் கால தாமதம் இல்லாமல் மேற்கண்ட கல்வி கட்டண நிலுவை தொகையை உடனடியாக விடுவித்து பள்ளி நிர்வாகிகளின் வயிற்றில் பாலை வார்க்க வேண்டுமாய் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
