பட்டத்து யானையா...? மத யானையா..?

 பட்டத்து யானையா...? மத யானையா..?

தேசிய கல்விக் கொள்கையை நகலெடுத்து அதில் சில திராவிட மாடல் கொள்கைகளை சேர்த்து மாநில கல்விக் கொள்கை என்று பெயர் வைத்து அதை வெளியிடுவதற்கு இவர்களுக்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.

தற்போது பதினோராம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்து இருக்கிறார்கள் இந்த பொதுத் தேர்வு கொண்டுவதற்கு மூல காரணமே தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பாடம் நடத்தப்படுவதில்லை என்பதுதான். தற்போது அந்த நிலை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு எந்த தீர்வும் இந்த கொள்கையில் இல்லை.

தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்கிறோம் என்று கூறி ஆட்சி அமைத்தவர்கள் இப்போது பிளஸ் 1 தேர்வை ரத்து செய்துள்ளார்கள் இதுதான் இவர்களின் அசாத்திய சாதனை.

இனி பிளஸ் டூ பாடத்தை தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய கட்டாயம். அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் ஓராண்டு படிப்பார்கள். திராவிட மாடல அரசின் இந்த அறிவிப்பு தேர்தல் அரசியல் ஆகவே பார்க்கப்படுகிறது.

அடுத்தபடியாக எட்டாம் வகுப்பு ஆல் பாஸ் திட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறார்கள். படிக்கவிட்டாலும் தேர்ச்சி என்பதால் பல மாணவர்கள் படிப்பின் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் இவர்கள் போலியாக உயிர் மூச்சு என்று உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கின்ற தாய்மொழியாகிய தமிழ் மொழியை கூட எழுத படிக்க தெரியாமலே பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு வரை திருட்டு மார்க்கு போட்டு தேர்வு எழுத வைப்பது தான் திராவிட மாடலின் கோட்பாடாக இருக்கிறது.

கல்விக் கொள்கை பொதுப்பட்டியலில் இருப்பதால்தான் மத்திய அரசு தலையிடுகிறது. எனவே மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என இப்போது வலியுறுத்துகிறார்கள் ஆனால் மத்தியில் திராவிட மாடல் கூட்டணி ஆட்சி இருந்தபோது ஏன் இவர்கள் அதை செய்யவில்லை என பாமர மக்கள் கூட கேட்க தொடங்கி விட்டார்கள்.

திராவிட மாடல் இரு மொழி கொள்கை என்பது  ஏழை மாணவர்கள் படிக்கின்ற அரசு பள்ளிகளில் மாணவர்கள் மட்டுமே மூன்றாவது மொழி கற்க கூடாது தனியார் பள்ளிகளில் இவர்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் தாராளமாக இந்தி சமஸ்கிருதம் பிரெஞ்சு உள்ளிட்ட எந்த மொழியும் கற்கலாம். ஓட்டு அரசியலுக்காக சில அரசு பள்ளிகளில் உருதும் மற்ற மொழியும் கற்கலாம் ஆனால் ஏழை மாணவர்களும் அண்டை மாநில எல்லைகளை வாழ்கின்ற மாணவர்களும் அவர்களின் தாய்மொழியை கூட கற்க இயலாத அவல நிலை இந்த ஆட்சியில் நீடிக்கின்றது. இதுதான் திராவிட மாடல் இரு மொழி கல்விக் கொள்கை சமூக சமத்துவ நீதி...? என்ன ஒரு பித்தலாட்டம் பாருங்கள்...!

தொழில்கல்வி குலக்கல்வி என்று உருட்டுவார்கள் மும்மொழிக் கொள்கை இரு மொழிக் கொள்கை என்பார்கள் இது தவிர அடிப்படையான பல விஷயங்கள் தேசியக் கல்விக் கொள்கையில் இருந்து நகலெடுத்து மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கையில் திட்டங்களுக்கு காலக்கெடுவோ அல்லது நடைமுறைப்படுத்த வேண்டிய முறையோ கொடுக்கப்படவில்லை. நிதி ஆதாரத்துக்கான எந்த அடிப்படையும் இந்த கொள்கையில் அறவே இல்லை.

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் போதுமான கழிப்பறை குடிநீர் சுகாதார வசதிகள் இல்லாமல் பாழடைந்த கட்டிடங்களாக அரசு பள்ளிகளில் இன்னும் பல இடங்களில் காணப்படுகின்றது. வகுப்பறைகள் இல்லாமல் கோயில் வளாகங்களிலும் மரத்தடியிலும் பள்ளிகள் நடத்தப்படுகிறது.

பெரும்பாலான பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களே இல்லை போதுமான ஆசிரியர்களே இல்லை, விளையாட்டு மைதானம் இல்லை.

மாணவர்கள் போதை பழக்கம் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிக்கு செல்கின்ற மாணவர்கள் ஒழுக்கம் கெட்டு வீணாக போய்விடுவார்களோ என்கிற அவல நிலைதான் தொடர்கிறது. இந்த நிலையில் மாநில கல்வி கொள்கைதான் சிறந்தது என்று பீற்றிக்கொள்வது வேறு.

மாநிலக் கல்விக் கொள்கை தான் சிறந்தது என்றால் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றும் CBSE பள்ளிகள் ஏன் நடத்துகிறார்கள்...? அவற்றை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிக் பள்ளிகளாக ஏன் மாற்றவில்லை என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.

நவோதயா பள்ளிகளையும் பி எம் ஸ்ரீ பள்ளிகளையும் திறப்பதால் இவர்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற பள்ளிகள் படுத்து விடும் என்பதால் தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டு மொழி உணர்வைத் தூண்டி சுயநல அரசியல் செய்கிறார்கள்.

மாநில கல்விக் கல்வி என்பது திராவிட மாடல் தேர்தலுக்கான அரசியல் நாடகம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

இப்போது தேசிய கல்விக் கொள்கையை விமர்சித்து யாரோ ஒருவர் எழுதிய புத்தகத்தை தன் பெயரில் தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை என்று ஒரு கல்வி அமைச்சரே தன்னுடைய சாதனைகளை பிரபலப்படுத்தி மொழி  சமயம் ஜாதி மத பாகுபதற்ற அனைவருக்கும் பொதுவாக இருக்கிற தேசிய கல்விக் கொள்கையை இழிவுபடுத்தி புத்தகம் வெளியீட்டு இருப்பது தமிழக மக்களுக்கு செய்துள்ள மிகப்பெரிய துரோகம்.

இதை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மதயானை புத்தகத்தையும், மாநிலக் கல்விக் கொள்கையும், தேசிய கல்விக் கொள்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக் கொள்கை மதயானையா..? அல்லது பாரத தேசத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டத்தை யானையா...? என்பது தெளிவாக தெரியும்.

திராவிட மாடலின் போலி பித்தலாட்டங்களை தோல் உரித்து  காட்டுவது தான் இந்த ஒரே தேசம் ஒரே கல்வி புத்தகத்தின் உண்மையான நோக்கம். இதன் நோக்கத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்போம்.

இந்தப் புத்தகத்தை முழுமையாக படியுங்கள்....! தமிழக மக்கள் அனைவரிடமும் கொண்டு போய் சேருங்கள்...!!

உங்கள் தேவைக்கு தொடர்பு கொள்ளுங்கள்: 9442943123

விலை Rs.150/- மட்டுமே