விஜய் போற போக்கு...! அச்சத்தில் திமுக..!?
இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று ஆட்சி அமைப்பது என்பது கடினமான காரியம். அதனால் எல்லா கட்சிகளும் கூட்டணியின் தயவை நாடி இருக்கிறது.
ஆளுங்கட்சியாக இருக்கிற திமுக கூட தன்னுடன் உள்ள கட்சிகளை ஒன்றை கூட விட்டு விடாமல் அப்படியே வைத்துக்கொண்டு அந்தக் கட்சிகள் வளராமல் இருந்தால் கூட தமிழகத்தில் தான் தான் பெரிய பலசாலி தன்னை எதிர்க்க யாரும் இல்லை என்கிற திமிரில் காட்டாச்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
எல்லா ஊடகங்களையும் தன் வசம் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை பலம் இல்லாதவர்களாக காட்டி அவர்கள் ஒன்று சேர்ந்து போட்டியிடாமல் தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை சூழ்ச்சிகளையும் அரசியல் பித்தலாட்டங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்த நிலையில் திரைப்பட நடிகர் விஜய் தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்து வருவது திமுக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் உச்சக்கட்டம் தான் கரூர் கோர சம்பவம்.
விஜயின் அரசியல் கூட தற்போது கரூர் சம்பவத்திற்கு முன், கரூர் சம்பத்துக்கு பின் என்று மாறி உள்ளது.
முன்பு மத்திய அரசையும் மாநில அரசையும் விமர்சித்து வந்த விஜய். தற்போது திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் தீய சக்தி திமுக என்று அழுத்தமாக சொன்னதின் காரணமாக தற்போதுள்ள சூழலில் அவர் திமுக பக்கம் போவதற்கான வாய்ப்புகள் திமுகவின் இன்னொரு அணியாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் அற்றுப் போய் உள்ளது.
அதுவும் இல்லாமல் அவர் பிரிக்கப் போகும் வாக்குகள் அனைத்தும் திமுகவின் வாக்குகளும் அவர்களுடன் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குகளும் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளும் ஆக இருப்பதால் இது திமுக கூட்டணியின் வாக்கு சதவீதத்தை வெகுவாக குறைத்து விடும். வெற்றி வாய்ப்பை தடுத்துவிடும். இதனால் திமுகவிற்கு 2026 சட்டமன்ற பொது தேர்தலில் கடுமையான சரிவு ஏற்படும் என்பதால் திமுக கூட்டணி கூடாரமே கடும் அதிர்ச்சியில் உள்ளது.
திமுக கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் பக்கம் சென்று தனி கூட்டணி அமைத்தாலும் திமுகவிற்கு ஆப்பு.. ஆப்பு... தான்.
அவர்கள் இல்லாமல் விஜயின் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டால் கூட இந்தக் கூட்டணியின் வாக்குகள் வெகுவாக சரிவதற்கு நிறை வாய்ப்புகள் உள்ளது.
இந்த தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடுவாரா...? இல்லை யாரோடாவது சேர்ந்து நிற்பாரா என்பது யானை அளவில் உள்ள மிகப்பெரிய கேள்விக்குறி....?
விஜய் தற்போது மிக தெளிவாக இருப்பதாகவே தோன்றுகிறது. நாம் தமிழர் கட்சி சீமானை போன்று பைத்தியக்காரத்தனமாக எல்லாம் முடிவு எடுக்க மாட்டார். தனித்துப் போட்டியிட்டு ஒன்றுமில்லாமல் போவதற்கு ஒரு சிலரையாவது சட்டமன்றத்திற்குள் அனுப்புவார் என்றே தோன்றுகிறது.
இந்த தேர்தலில் அவரது சாய்ஸ் அதிமுக பாஜக கூட்டணி பக்கம் இருக்கும் என்று தாராளமாக நம்பலாம். தற்போது மக்களின் நம்பிக்கையும் அந்தப் பக்கம் தான் உள்ளது. இவர்களுடன் பாமக, தேமுதிக இன்னும் சில கட்சிகள் விரைவில் இணைந்து விடும். இவர்களுடன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் இணைந்து விட்டால் திமுக கூட்டணி வாஷ் அவுட் ஆகும் என்பது தமிழகத்தில் உள்ள சின்ன குழந்தைக்கும் தெரியும்.
அதனால் தான் அவர்களுக்குள் உள்ள அச்சத்தில் கண்டபடி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்....
விதைத்தவர்கள் அவர்கள் அல்லவா....? அறுவடை செய்தே தீர வேண்டும்....!