கிருஷ்ணகிரியில் திமுகவின் நகர செயலாளராக 21 வருடங்களாகஇருந்து வந்த எஸ்.கே. நவாப், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவரது குடும்பத்துடன் அதிமுகவில் இணைந்தார்.
கிருஷ்ணகிரி கோட்டை பகுதி 1-வது வார்டை சேர்ந்தவர் எஸ்.கே.நவாப், இவர் கடந்த 21 வருடங்களாக திமுக நகர செயலாளராக செயல்பட்டு வந்தார், இவரது மனைவி பரிதாநவாப், கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவராக 2-முறை பதவி வகித்தார் இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நவாப்பை நகர செயலாளர் பொறுப்பில் இருந்து திமுக தலைமை கழகம் நீக்கியது .
இதை தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவராக பதவி வகித்த நவாபின் மனைவி பரிதாநவாப் மீது திமுக காங்கிரஸ் மற்றும் அதிமுக நகர மன்ற 27 உறுப்பினர்கள் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதை கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனரிடம் கொடுத்தனர்.
இதையடுத்து கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவராக பொறுப்பு வகித்த பரிதா நகர்மன்ற உறுப்பினர் இருந்து நீக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்தது.
இதனால் நகர செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நவாப் நகர் மன்ற தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட இவரது மனைவி பரிதா ஆகியோர் வேறு கட்சிக்கு செல்வதாக கடந்த ஒரு வாரமாக தகவல் கசிந்த நிலையில்
இன்று காலை (15.12.2015) நவாப் அவரது மனைவி பரிதா அவரது மகன் சுஹேல் ஆகியோர் துணை பொது செயலாளர் கே பி முனுசாமி . கிருஷ்ணகிரி நகர செயலாளர் கேசவன் ஆகியோர் முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்
இதனால் கிருஷ்ணகிரி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
K. Moorthi. District Reporter

