குன்றம் குமரனுக்கே...!அறநிலையத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி...!?
திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதியரசர் GR சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய தீர்ப்பின் மீது HR&CE தொடர்ந்த *மேல் முறையீடு மனுவினை நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்கள் அமர்வு தள்ளுபடி செய்தது.*
இன்று மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றுவது உறுதி.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.,3) நடைபெறுகிறது. இங்கு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பக்தர்கள் விரும்பினர்.
ஆனால், மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் 1920 ம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்தது.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார். இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என உத்தரவிட்டு இருந்தார்.
இதனை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கு ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இதனையடுத்து, தனி நீதிபதி உத்தரவு அடிப்படையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு கோயிலில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இன்று மாலையில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை :
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் பிற பகுதிகளை போல பழைய தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் இன்று ஏற்ற வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
அதை நிறைவேற்றவில்லை என மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் இன்று மாலை5.00 மணிக்கு காணொளி மூலம் போலீஸ் கமிஷனர் ஆஜராக உத்தரவிட்டது.
அரசு தரப்பில் முன்கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி சுவாமிநாதன் நீதிமன்ற உத்தரவுபடி இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் உள்ள கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்கனவே ஐகோர்ட் மதுரைக் கிளை தனி நீதிபதி அனுமதியளித்து இருந்தார். இதை நிறைவேற்றாததால் கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் ஆனது. கலெக்டர் சரவணன் ஆஜர் ஆனார். மாலை 6:00 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
105 ஆண்டுக்குப் பிறகு ஏற்றப்படுகிறது
