ஆட்சியாளர்களை அதிரவைத்த அறப்போராட்டம்

 ஆட்சியாளர்களை அதிரவைத்த அறப்போராட்டம்


மத்திய அரசு வழங்கிய RTE  நிதி தனியார் பள்ளிகளுக்கு  வழங்காமல் ஏமாற்றும் தமிழக அரசே கண்டித்து தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவு சார்பாக  பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 இதற்காக கட்சியை சார்ந்த நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் அனுமதி பெறுவது தொடர்ந்து மாவட்டம் தூரம் உள்ள தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் போராட்டம் தொடர்பான மனுவை தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் வழங்கினார்கள்.

 தமிழகம் முழுவதும்  போஸ்டர்கள்  பேனர்கள்  அடித்து தங்களின் கோரிக்கையை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல  அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரகடனம் செய்தார்கள்.  இந்தப் பிரச்சனை தனது ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாகவே பேசப்பட்டு வந்தது.

 இந்த நிலையில் DPI வளாகத்தில் போராட்டம் நடத்த  அனுமதி மறுத்த தமிழக அரசு பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தின் அனைத்து இரும்பு கதவுகளை இழுத்து மூடியதோடு இல்லாமல்  ஈ, காக்கை கூட உள்ளே நுழைய முடியாத அளவுக்கு  பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு ஒருவர் இருவர் மட்டும் உள்ளே செல்கின்ற அளவுக்கு வழி விட்டு இயக்குனர் அலுவலகமே வெறிச்சோடி  போகும் அளவிற்கு போராட்டங்கள் மட்டுமல்ல பொதுமக்கள் உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திரண்ட பாஜக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கொடி பிடித்து கோஷம் போட்டனர். பள்ளிக்கல்வித்துறையில் நடக்கும் அனைத்து ஊழல்களையும் புட்டு புட்டு வைத்தனர்.

 இந்த நிகழ்ச்சிக்கு பாஜக கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் கே. ஆர். நந்தகுமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். மற்றும் மாநிலம் முழுதும் ஓசூரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள கல்வியாளர் பிரிவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசின் மெத்தென போக்கை கண்டித்து பேசினார்கள். பின்னர் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று தங்களின் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். அந்த மனுவில்....


அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி கற்பித்த வகையில் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்வி கட்டண நிலுவைத் தொகை மத்திய அரசு வழங்கியும்...

 மாநில அரசு அதை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுவிக்காததால் பல்வேறு பள்ளிகள் மிகுந்த பொருளாதார நெருக்கடிகுள்ளாகி.. பாரதிய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவு நிர்வாகிகளிடம்...மாநில முழுக்க தங்கள் வேதனைகளை பதிவு செய்துள்ளனர்..

தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்வி கட்டணத்தை எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு கடந்த ஆண்டுகளில் மிக குறைவாக ரூபாய் 6000 என குறைத்து நிர்ணயித்து அரசு ஆணை வெளியிட்டு கொடுத்துள்ளீர்கள்...

தனியார் பள்ளிகளும் அந்த அரசாணைக்கு. எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடி அரசு ஒரு மாணவனுக்கு கல்விக்காக செலவு செய்யும் கல்வி கட்டணம்.... அல்லது தனியார் கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் அவர்களால் நிர்ணயித்துள்ள கல்வி கட்டணம் இதில் இரண்டில் ஒன்றை தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் ....அந்த கட்டணத்தை கூட இதுவரை தரவில்லை. 

அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி மத்திய அரசு 60% மாநில அரசு 40% தர வேண்டும் ...அதையும் முறைப்படுத்தி மூன்று தவணைக்களாக தர வேண்டும்..

அதையும் தராமல் இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டியும், 

தவனையும் செலுத்த முடியாமல் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் தினசரி செலவுகளை ஈடு செய்ய முடியாமல் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்...

RTE கல்வி நிதி சம்பந்தமான உயர் நீதிமன்ற வழக்கிலும் ஓரிரு வாரங்களுக்குள்ளாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கி விடுவதாக உத்தரவாதம் அளித்தும்.... இதுவரை கல்வி கட்டண நிலுவைத் தொகை வழங்குவதற்கான எந்த பணிகளும் நடைபெற்றதாக தெரியவில்லை...

பாரதிய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவின் சார்பில் மாநில முழுக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்., தனியார் பள்ளிகள் இயக்குனர், SSA SPD , பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாண்புமிகு. தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கோரிக்கை மனுக்களை நேரிலே வழங்கி வருகிறோம்...

அதைத்தொடர்ந்து மாநில முழுக்க சுவரொட்டிகள் பேனர்கள் மூலம் எங்கள் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக தந்தம் எந்தவித துரித நடவடிக்கையும் எடுக்காததால்.....

 இன்று 04.11.,2025 காலை 11 மணிக்கு சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்...

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி நிர்வாகிகள் கல்வியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பி தங்களிடம் எங்களின் நியாயமான கோரிக்கையான மத்திய அரசு தந்த RTE 25 % கல்வி நிதியை உடனே சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுவிக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவின் சார்பில் தமிழக அரசை வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.