பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
மத்திய அரசு வழங்கிய RTE கல்வி கட்டணத்தை வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து வரும் நான்காம் தேதி DPI வளாகத்தில் தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் பாஜக கல்வியாளர் பிரிவின் . மாநிலத் தலைவருமான கே ஆர். நந்தகுமார் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மிக முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது...
பேரன்புடையீர்... வணக்கம்...
தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கான RTE 25 % மாணவர்களை சேர்த்திட்ட வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தரவேண்டிய கல்வி கட்டண நிலுவைத் தொகையை இத்தனை நாளாக மத்திய அரசு தரவில்லை என்று மாநில அரசு சொன்னது....
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக சொன்னதால் கடந்த இரண்டு ஆண்டுகள் தந்தோம்...
தற்போது NEP 2020 ஏற்க மாட்டோம் என்று சொன்னதால் நிறுத்தி வைத்தோம்.
இப்பொழுது மத்திய அரசு நிலுவைத் தொகை ரூபாய் 586 கோடியை விடுவித்து ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் தனியார் பள்ளிகளுக்கு தராமல் காரணங்களை சொல்லி கால தாமதம் செய்கிறது..
ஜூன் மாதம் செய்ய வேண்டிய RTE 25% சேர்க்கையை கூட நீதிமன்றம் சொல்லித்தான் இந்த அரசு நவம்பர் 31 நிறைவு செய்கிறது...
அதுவும் நாம் நம் பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்த்த மாணவர்களையே சேர்த்து அவரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடு என்று வற்புறுத்தி ஆணை வெளியிடுகிறது....
நமக்கு தரவேண்டிய இரண்டு ஆண்டு கல்வி கட்டணம் பாக்கி நிலுவையில் வைத்துக்கொண்டு நம்மிடம் உடனே பணம் பிடுங்கி பெற்றோர்களுக்கு கொடுத்துவிடு என்று அரசாணைகள் வெளி யிடுகிறார்கள்...
தனியார் பள்ளி சங்கங்கள் RTE கல்வி கட்டண பாக்கி வழங்குவார்கள்.... நமது கோரிக்கைகள் எல்லாம் தீர்த்து வைப்பார்கள் என்று ஓராண்டாக
அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைந்து தனியார் பள்ளிகளுக்காண பிரச்சினைகளை தீர்த்து விடாதா ? என்று ஏக்கத்தில் காத்திருக்கிறோம்...
எதுவும் நடந்த பாடு இல்லை... நீதிமன்றம் போக வில்லை ... போராட்டம் நடத்த வில்லை செய்தியாளர்களை சந்திக்கவில்லை
எல்லாம் சங்கம் செய்யும் என்று காத்திருந்தேன்.... எதுவும் நடக்காததால் வேறு வழி இல்லாமல் ..,.. இப்போது போராடுவது ஒன்றே சரியாக இருக்கும்....
இன்னும் ஓரிரு மாதங்கள் காத்திருந்து மொத்தமாக ஏமாறுவதற்கு எப்படியேனும் பள்ளி நிர்வாகிகளை பாதுகாத்திட வேண்டும் அவர்கள் உரிமைகளை மீட்டெடுத்திட வேண்டும்.... இல்லை என்றால் தேர்தல் அறிவித்தால் எல்லாம் ஏமாற்றமாகிவிடும் என்பதால்....
நாம் ஏமாறக்கூடாது பள்ளி நிர்வாகிகளை இனியும் ஏமாற்ற கூடாது என்பதற்காக காத்திருப்பதும் காக்க வைப்பதும் கடமை வீரனுக்கு அழகு இல்லை என்பதால்.... போராட்ட களத்திற்கு வந்துள்ளோம்....
எனவே தனியாக இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் என்கிற முறையில் RTE கல்வி கட்டண நிலுவைத் தொகையை உடனே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்க வேண்டி வருகின்ற 04.11.2025 தேதி செவ்வாய்க்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை, D.P.I. வளாகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகம் முன்பு மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறோம்.
அதற்கு முன்பாக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் பேனர்கள் பத்தாயிரம் சுவரொட்டிகள் பத்திரிக்கை செய்திகள் பேட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் DEO ,CEO , Director, SSA SPD, Education Secretary, Education Minister.C.M. கோரிக்கை மனுக்கள் வழங்கியும் இதுவரை எந்தவித நல்ல பதிலும் கிடைக்காததால்.... வேறு வழியின்றி போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நீங்கள் பள்ளி நிர்வாகி என்கிற முறையில் தயவு செய்து நேரில் வர வேண்டும்..
நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது... நீங்கள் யாரும், எதற்கும், எவருக்கும் பயப்பட வேண்டாம்...
உங்களுக்கு வருவதற்கு பயமாக இருந்தால்.... உங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய பெருமக்களையாவது அனுப்பி வையுங்கள்...
இது என் அன்பு வேண்டுகோள்.... உங்கள் யாருக்கும் எதுவும் நடக்காமல் 100% பாதுகாக்கப்படுவீர்கள்... அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து நம் உரிமையை கேட்க வரும் நான்காம் தேதி சென்னைக்கு வாருங்கள்...
இல்லையென்றால் நீங்கள் இனிமேல் யாரும் என்னிடம் RTE கல்வி கட்டணம் என்ன ஆனது என்று எதுவும் கேட்க வேண்டாம்....
எதுவும் இலவசமாக உடனே கிடைக்காது ...
நம் உரிமைகளை நிலை நாட்ட ..
நம் கடமைகளைச் செய்ய வேண்டும்...
04.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்குள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு அணி திரள்வோம் நம் உரிமைகள் மீட்போம் வாரீர்... என்று உங்கள் அனைவரையும் இரு கரம்கூப்பி அழைக்கின்றேன்...
கே.ஆர்.நந்தகுமார்.
மாநில பொதுச் செயலாளர்.
01.12.2025.
