கிருஷ்ணகிரியில் காலி வீட்டுமனை சர்வே வழக்கில் லஞ்சக் குற்றம்: இரண்டு அதிகாரிகள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், பந்தாரப்பள்ளி கிராமம்: கிருஷ்ணகிரி தாலுகா, பந்தாரப்பள்ளி கிராமத்து திரு. P. முருகன் (வயது 56), தனது காலி வீட்டுமனை சர்வே. எண் 117/6B1A1-ல் சுமார் 1308 அடி பரப்பளவில் தனிப்பட்டா வழங்குவதற்காக கடந்த 08.10.2025 அன்று ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
இதற்கிடையில், புகார்தாரர் திரு. முருகன், VAO திரு. ராமசந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், குருபரப்பள்ளி வருவாய் கிராமம் மற்றும் சர்வேயர் திரு. வளையாபதி ஆகியோரிடம் நேரில் 04.11.2025 அன்று பேசி, சர்வேயை அளிக்கும்படி கேட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், VAO திரு. ராமசந்திரன், முருகனிடம் ரூ.6,000/- லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே தானும் சர்வேயர் திரு. வளையாபதியும் சேர்ந்து சர்வே அளிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியதாக புகார்த்தாரர் தெரிவித்துள்ளார். லஞ்சம் வழங்க மறுப்பதால், திரு. முருகன் கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் நடவடிக்கை எடுத்து, ரூ.6,000/- லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் திரு. ராமசந்திரன் மற்றும் சர்வேயர் திரு. வளையாபதி ஆகியோரைக் கைது செய்து, சம்பந்தப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
K. Moorthy. Krishnagiri Reporter
