மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசு விடுவித்து 25 நாட்களுக்கு மேலாகியும் தமிழக அரசு அந்தக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு இன்று வரை வழங்காமல் இருக்கின்றது.
தமிழக அரசின் இந்த மெத்தென போக்கை கண்டித்து பாஜகவின் கல்விப் பிரிவு சார்பாக நவம்பர் 4ம் தேதி போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு இதற்கான நிதியை விடுவிக்காததால் தான் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை நிறுத்தி இருந்தோம். தற்போது இதற்கான நிதி மத்திய அரசிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் இந்த 2025 -26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குகின்றோம் என்று கூறி 3 .10. 2025 அன்று எல்லா பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
அதில் இந்த ஆண்டுக்கான சேர்க்கை துவங்க உள்ளதால் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ஏற்கனவே பெறப்பட்டிருந்தால் அதை திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவு ஏற்று தமிழகத்தில் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் RTE மாணவர் சேர்க்கைக்கான பதிவை தொடங்கியது. இதன் அடிப்படையில் 31. 10.2025 அன்று சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எல் கே ஜி வகுப்பில் இந்த ஆண்டு சேர்க்கப்பட உள்ளனர்.
இந்த ஆண்டோடு சேர்த்து தனியார் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டு கட்டணத்தை திமுக அரசு வழங்க வேண்டும்.
இந்த திட்டத்தில் சேருகின்ற மாணவர்களிடம் கட்டணம் வாங்க கூடாது என்று கட்டளை இடுகின்ற அரசு இதுவரை இவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை திருப்பி தருவது பற்றி எந்த உத்தரவும் போடாமல் இருப்பது பள்ளி நிர்வாகிகளை மிகுந்த கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.
இது நாள் வரை இதற்கான கட்டணத்தை மத்திய அரசு வழங்காததால் தான் தமிழக அரசால் அதை திருப்பித் தர முடியவில்லை என்று கூறியது. ஆனால் இப்போது இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு வழங்கிய பின்னரும் அது உரிய நேரத்தில் சரியாக பள்ளிகளுக்கு வழங்காமல் இருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பாஜகவின் கல்விப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தப் போராட்ட அறிவிப்பு குறித்து தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடங்கி முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர்கள் தனியார் பள்ளி இயக்குனர்கள் SSA இயக்குனர்கள் என்று அனைவரிடமும் இது தொடர்பான மனு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அதிகாரிகள் எங்களிடம் எந்த அதிகாரமும் இல்லை அரசு அறிவித்தால் உடனே கொடுத்து விடப் போகிறோம் என்று கூறினர்களே தவிர எப்போது கொடுக்கப்படும் எப்படி கொடுக்கப்படும் என்கிற விவரத்தை மட்டும் அவர்களால் தெரிவிக்க இயலவில்லை.
இதனால் இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்கிற நல்ல நோக்கத்தோடு அவர்கள் கல்வி உரிமை நிலை நாட்ட வேண்டும் அவர்கள் தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என்பதற்காக பாஜகவின் கல்விப் பிரிவு மத்திய அரசு வழங்கிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரி நவம்பர் 4 ஆம் தேதி தமிழக அரசு பள்ளிக் கல்வி இயக்குனரகம் முன்பாகபோராட்டம் நடத்துகின்றது.
இந்தப் போராட்டத்திற்கு பாஜகவின் கல்வியாளர் பிரிவு மாநிலத் தலைவர் கே ஆர் நந்தகுமார் தலைமை தாங்குகிறார். பாஜகவின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைக்க இருக்கிறார். முன்னாள் மாநில தலைவர் கே அண்ணாமலை சிறப்புரை ஆற்றுகிறார்.
மிக பிரமாண்டமாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழக அரசின் மெத்தன போக்கால் பாதிக்கப்பட்டு இருக்கிற பள்ளி நிர்வாகிகள் பெற்றோர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கல்வியாளர் பிரிவின் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டம் தோறும் உள்ள நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆரப்போராட்டத்திற்கு பிறகாவது தமிழக அரசு 2 ஆண்டுகளுக்கான நிதியை தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்குமா என்பதுதான் பல டாலர் கேள்வி...?


