உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மு க ஸ்டாலின் எடுக்கும் புதிய அவதாரம்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மு க ஸ்டாலின் எடுக்கும் புதிய அவதாரம் 

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்…. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திருவண்ணாமலையிலிருந்து வருகிற 29 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

இந்த சுற்றுப்பயணத்தில் பொதுமக்களின் தேவைகளையும்,குறைகளையும் மனுக்களாகப் பெற்று அந்த மனுக்கள் பொதுமக்கள் முன்னிலையிலேயே பூட்டி சீல் வைக்கப்படும். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு ( அக்னாலஜ் மண்ட் ) ஆதாரமாக ரசீது வழங்கப்படும்.

திமுக ஆட்சி அமைந்ததும் நூறு நாட்களில் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். இதற்கென்று தனியாக ஒரு துறை உருவாக்கப்படும்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்கள் 91710 91710 என்ற தொலைபேசி எண் மூலமாகவும்,www. Stalinani.com என்ற இணையதளம் மூலமாகவும் தங்களது குறைகளை கூறலாம்.

இந்த மணுக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பாளர். கண்டிப்பாக சொன்னதை செய்வேன். என்று கூறினார்.