தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு இயக்க உதவி பொதுச் செயலாளராக அரக்கோணம் மகாராஜன் தேர்வு
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு இயக்கத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் சென்னை அம்பத்தூரில் உள்ள சேது பாஸ்கர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர். பாபு தலைமை தாங்கினார். பொது செயலாளர். விஜயரங்கம் மற்றும் பொருளாளர் ரகுநாதன் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து 150 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது மாநில நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் போட்டியிட்ட ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் அரக்கோணம் மஹாராஜன் உதவி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை உதவி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கு இதய பூர்வமான நன்றி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்
தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
