அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை திறப்பு விழாவில் பங்கேற்று அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்வது மகிழ்ச்சியான காரியம் என அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி தெரிவித்தார்.
பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தாளப்பள்ளி ஊராட்சி பாஞ்சாலியூர் பகுதியில் மாவட்ட மகளிர் அணி தலைவி சுகந்தி மாது சொந்த செலவில் 2 லட்சம் மதிப்பில் 20 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது விழாவில் பங்கேற்ற அதிமுக கழக துணை பொது செயலாளர், முன்னாள் அமைச்சரும் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே பி முனுசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொது மக்களிடையே பேசுகையில், நாட்டில் நல்ல சிந்தனை தர்ம சிந்தனை உள்ளவர்கள் பொதுமக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும் எனும் எண்ணம் உள்ளவர்கள் கொண்ட கட்சி அதிமுக தான் மக்களை பாதுகாக்கும் பணியை அரசாங்கத்தினுடையது ஆனால் அரசாங்கத்திற்கே வராத சிந்தனையை இந்த பகுதியில் அதிமுக மாவட்ட மகளிர் அணி தலைவி சுகந்திக்கும் அவரது கணவர் மாதுக்கும் வந்துள்ளது, உண்மையாகவே உளமாற அவர்களை பாராட்டுகிறேன்,
இப்பகுதியில் நடைபெறும் அனைத்து செயல்களையும் கண்காணிக்கும் வகையில் சிசி டிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பாஞ்சாலியூர் பகுதியில் தங்களது சொந்த செலவில் சிசிடிவி கேமராக்கள் அமைத்துஅதை திறந்தவைக்கும் நல்ல வாய்ப்பை பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பேசினார்.
தொடர்ந்து மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் சேர்ந்த 100 பேருக்கு சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றார் . தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார், சேலம் மாவட்ட ஐடி விங் மண்டல துணைச் செயலாளர் நிர்மல் ஆனந்த், முன்னாள் மாவட்டபால்வள தலைவரும் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளருமான தென்னரசு, நகர இளைஞரணி கார்த்திக்பால்ராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
K. Moorthy. Reporter
