இந்தியாவில் 89,441 அரசு பள்ளிகள் மூடல்...?! தமிழகத்தின் நிலை என்ன...?

இந்தியாவில் 89,441 அரசு பள்ளிகள் மூடல்...?! தமிழகத்தின் நிலை என்ன...?

2014 முதல் 2024ம் ஆண்டு வரை, இந்தியாவில் 89,441 அரசு பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.



பொதுவாக, இந்தியாவில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதை கடந்து தான் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை இருக்கும்.

ஆனால், இந்த நிலை தற்போது மாறி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் அரசுப் பள்ளிகள் அதிகம் உள்ளன.
அதற்கடுத்ததாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

இந்த நிலையில், 2014 முதல் 2024ம் ஆண்டு வரை, எவ்வளவு அரசு பள்ளிகள் மூடப்பட்டன என்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அதிக அரசுப் பள்ளிகள் உள்ள மத்திய பிரதேச மாநிலம் தான், அதிக பள்ளிகளையும் மூடி உள்ளன. 

அதாவது, 2014 முதல் 2024ம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் சுமார் 29,410 அரசுப் பள்ளிகள் மூடுப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து, அடுத்ததாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 25,126 பள்ளிகளும், ஒடிசாவில் 10,026 பள்ளிகளும், அசாமில் 7,919 பள்ளிகளும், ஜார்கண்டில் 5,527 பள்ளிகளும், ஜம்மு-காஷ்மீரில் 5,089 பள்ளிகளும், பீகாரில் 3,829 பள்ளிகளும், மகாராஷ்டிராவில் 2,560 பள்ளிகளும், ஆந்திராவில் 1,666 பள்ளிகளும், உத்தரகாண்ட்டில் 1,552 பள்ளிகளும், பஞ்சாபில் 1,530 பள்ளிகளும் மூடப்பட்டிருக்கின்றன.

இந்த பட்டியலில், தமிழ்நாட்டில் 2014 முதல் 2024 வரையில் 239 பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. 

புதுச்சேரிக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தான் குறைந்த அளவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதுதவிர, கேரளாவில் 295 பள்ளிகள், கர்நாடகாவில் 1,180 பள்ளிகள் மற்றும் தெலங்கானாவில் 754 அரசுப் பள்ளிகளை அந்தந்த மாநில அரசுகள் மூடி இருக்கின்றன.

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு, தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் படையெடுப்பதால் அதிகம் பள்ளிகள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. 

மறுபுறம், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் அதிகளவில் மூடுவது கிடையாது என்று  தகவல்கள் தெரிவித்தாலும் இது முற்றிலும் உண்மை இல்லை.

ஆண்டு தோறும் தமிழக அரசு பள்ளிகளில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. 

தமிழகத்தில் தொடக்கக்கல்வி தோற்றுவிட்டது என்று சொல்ல வேண்டும். பல அரசு பள்ளிகளில் ஒருவர் கூட புதிதாக சேராத நிலை உள்ளது. ஒற்றை இலக்கத்தை தாண்டி பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடைபெறவில்லை.

*மாணவர் சேர்க்கை இல்லாத 8,000 பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள்: மத்திய கல்வி அமைச்சகம்.*

நாடு முழுவதும் 2024-25 கல்வியாண்டில் மட்டும் சுமார் 8,000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர தரவுகளில் தெரிவித்துள்ளது.

இந்த பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி நாடு முழுவதும் சுமார் 7,993 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் சேர்க்கைகூட நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது அதற்கு முந்தைய கல்வி ஆண்டினை காட்டிலும் 38 சதவீதம் குறைவாகும். 

2023-24 கல்வி ஆண்டில் 12,954 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என தகவல்.

2024-25 கல்வியாண்டில் ஒரு மாணவர் கூட சேராத இந்த 7,993 பள்ளிகளில் சுமார் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 

அவர்களில் 17,965 ஆசிரியர்கள் மேற்குவங்க மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 

அதே போல தேசிய அளவில் மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகளின் எண்ணிக்கையிலும் மேற்கு வங்கம் 3,812 பள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

மாணவர் சேர்க்கை இல்லாத மாநிலங்களில் 2,245 பள்ளிகளுடன் தெலங்கானா இரண்டாம் இடத்தில் உள்ளது. 

மத்திய பிரதேசம் 463 பள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 

இந்த பள்ளிகளில் தெலங்கானா மாநிலத்தில் 1,106 ஆசிரியர்களும், மத்திய பிரதேசத்தில் 223 ஆசிரியர்களும் பணியில் உள்ளனர். 

உத்தர பிரதேசத்தில் 81 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஓர் ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ள சுமார் ஒரு லட்சம் பள்ளிகளில் சுமார் 33 லட்சம் மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். 

இதில் ஆந்திரா முதலிடம் வகிக்கிறது. உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

2022-23 மற்றும் 2023-24 இடையிலான கல்வி ஆண்டினை ஒப்பிடும் போது இந்த காலகட்டத்தில் ஓர் ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 6 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, அசாம், இமாச்சல், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களிலும், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் இந்த வகை பள்ளிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.