உலக பக்கவாத தினம் - வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உலக பக்கவாத தினம் - வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் நடைபயணம் (Walkathon 2025) நிகழ்வினை மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில், வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் முன்னிலையில் வேலூர் எம்.எல்.ஏ. ப. கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்த நடைபயணம் நிகழ்விற்கு நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்து பேசியதாவது

இன்றைய கால கட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் துரித உணவு, புகை மற்றும் போதை பழக்கம், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பக்கவாதம் (Stroke) நோய் ஏற்படும் நிலை உள்ளது மேலும், இது போன்ற காரணங்களால் இன்றைய இளைய தலைமுறையினர் பெருமளவில் பக்கவாதம் நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே. பக்கவாத நோய் பாதிப்பு வராமல் தடுக்க மற்றும் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. உலக பக்கவாத தினத்தையொட்டி நறுவீ மருத்துவமனை ஒரு விழிப்புணர்வு நடைபயணம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வழிமுறைகளை கைவிட வேண்டும்.

வேலூர் கோட்டை மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு நடைபயணத்தில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் வி.எஸ். முருகன், ஜெய்சங்கர். சுமதி மனோகரன், இந்து அறநிலை குழு உறுப்பினர் நீதி (எ) அருணாச்சலம், நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத். தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் இராமன், பொது மேலாளர் நிதின் சம்பத், நரம்பியல் துறை தலைமை மருத்துவர் சிற்றம்பலம் மற்றும் பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவ மாணவியர். நறுவீ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள். ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்று பக்கவாதம் நோய் குறித்த விழிப்புணர்வு சுலோகங்களான 'ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்'. 'பக்கவாத அறிகுறிகளை உடனே அறிந்து உயிரை காப்போம்'. 'விழிப்புடன் இருந்தால் விநாடிகளில் உயிரை காக்கலாம்', 'தக்க நேரத்தில் சிகிச்சை பெற்றால் குணம் பெறலாம்" உள்ளிட்ட பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். வேலூர் கோட்டை காந்தி சிலை அருகிலிருந்து தொடங்கிய இந்த நடைபயணம் காட்பாடி சாலை, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக நறுவீ மருத்துவமனையை அடைந்தது.

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.