எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?

எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?

அதிமுகவை ஒருங்கிணைப்போம் என்று செங்கோட்டையன் போட்ட கண்டிஷனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். 

இதன் பிறகு அதிமுக விவகாரங்களில் தலை காட்டாமலிருந்த செங்கோட்டையன் 6 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அதிமுக தலைவரும், முக்கிய அமைச்சர்களும், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தார். இந்த தகவல் முன்கூட்டியே அதிமுக அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையனுக்கு மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

அவரிடம் அறிவிக்கபடா விட்டாலும் இந்த செய்தி அறிந்த உடனேயே அவரும் கருப்பு பட்டை அணிந்து வந்தார். இந்த நிகழ்வு அவர் இன்னும் அதிமுக உடன் இணக்கமாக தான் இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் 10 நாள் கெடு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 1 மாதமோ அல்லது ஒன்றரை மாதமோ எடுக்கலாம் என்று தான் கூறினேன்.

ஆனால் ஊடகங்கள் அதனை தவறாக புரிந்து கொண்டன என்று கூறினார். இதனால் செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை கைவிட்டு விட்டதாகவும் தகவல் பரவுகிறது. இதற்கு காரணம் என்னவென்று ஆராயும் போது தான், அதிமுக கூட்டணியில் விஜய் சேர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் பட்சத்தில், அந்த கூட்டணி உறுதி செய்யபட்டுவிட்டால், அதன் பிறகு அதிமுகவில் செங்கோட்டையனின் செல்வாக்கு அடியோடு சரிந்து விடும் என்பதை அறிந்த அவர், இபிஎஸ்யுடன் சமரசமாக செல்ல முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த கூட்டணி அமைந்தால் அது சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று விடும். அதனை கருத்தில் கொண்ட செங்கோட்டையன் வெற்றி கூட்டணியில் சேர, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இபிஎஸ்க்கு தலையாட்டுகிறார் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.