76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
*கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர இந்தியாவின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.*
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு கொடி கம்பத்தில் நமது தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையுடன்,ஆட்சியர் சரயு ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நாட்டின் சமதானத்தை வலியுறுத்தும் வகையில் சமாதான புறாக்கள் மற்றும் வண்ண பலுன்களையும் வான் நோக்கில் பறக்கவிட்டு, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு பதக்கம் பாராட்டு சான்றிதழ்களும்
வழங்கி 45 நலிந்தோர்க்கு சுமார் 35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த சுதந்திர தின விழாவில் அனைத்து துறை அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
K. Moorthy Krishnagiri Reporter