10,12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
10,12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் மாணவர்கள் இதற்காக தீவிரமாக தயாராக வருகின்றனர்.
இந்நிலையில் 10,12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்புக்கு டிச.9 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச.9-ல் தமிழ், டிச.10-ல் ஆங்கில பாடத் தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்புக்கு டிச.10 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.10 தமிழ், டிச.11 விருப்ப பாடம், டிச.12 ஆங்கிலம், டிச.16 கணிதம், டிச.19 அறிவியல், டிச.23 சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. 10, 12-ம் வகுப்புகளுக்கு டிச.23-ல் தேர்வு நிறைவடையும் நிலையில் டிச.24 ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்படும்.