செங்கோல் பற்றி CPM. M.P. சு. வெங்கடேசனுக்கு என்ன தெரியும்...? மாவோ வை போன்று பெண் பித்தராக எந்த அரசரும் இருந்ததில்லை...!! : பழ கருப்பையா காட்டம்...!?
தமிழக அரசியல்வாதியும், எழுத்தாளரும், நடிகருமானவர் பழ. கருப்பையா. இவர் தமிழக தன்னுரிமை கழகத்தின் தலைவருமாவார்.
மேலும் இவர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரஸில் தொடங்கினாலும், கட்சிகள் மாறி பிறகு திமுகவிலும் இணைந்து, கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்கு, ஒரு கார்ப்ரேட் நிறுவனம் போல கட்சி நடத்துகிற விதம், பணமே எல்லாம் என கருதுகிற தன்மை ஆகியவை எனக்கு மிகப்பெரிய சலிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் திமுகவிலிருந்து விலகுவதாக முடிவு எடுத்து விலகினார். இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சியின் எம்.பி ஆன சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் செங்கோல் பற்றி தவறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும் சமயத்தில் பேசியதாவது,
பெண்களுடனே பயணித்த மாவோ:
சு.வெங்கடேசன் பாராளுமன்றத்தில் தமிழில் பேசியிருக்கிறார், ஆகவே செங்கோல் பற்றி அவர் புரிந்து தான் பேசியிருப்பார். நாவல் எழுதி இருக்கிறார் ஒரு தெளிவு அவருக்கு இருக்கும் என்று நினைத்தேன். செங்கோலுக்கும், ஆசை நாயகிகள் வைத்ததற்கும் என்ன தொடர்பு! மாவோ ஈடு இணை இல்லாத ஒரு புரட்சியால், நீண்ட பயணம் மேற்கொள்வதற்கு ஒரு தனி ரயிலில் பயணிப்பார் அப்பொழுது ஒரு பெட்டியில் இவர் வந்தால், மற்றொரு பெட்டி முழுவதும் பெண்கள் இருப்பார்கள். இந்த தகவலை அந்த புரட்சியாளரின் மருத்துவர் தனது பயோகிராபியில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஒரு பெட்டியில் உள்ள பெண்களில் யாரை தேர்ந்தெடுப்பார் என்பது அவருடைய சுவை! இந்த அளவிற்கு மன்னர்கள் கூட இருந்ததில்லை. நான் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் மாவோவும் ஒரு மிகப்பெரிய ஆள், அவருடைய ஆட்சி முறை மிக கொடூரமாக இருந்தது என்பது வேறு, அது தனி பாதை! நான் கேட்கிறேன் பெண்ணை ஆசை நாயகியாக வைத்தது பெண் குலத்திற்கே கேடு என்பது உங்களுடைய அடிப்படை வாதமாக இருந்தால், அதிகாரத்திலிருந்த புரட்சியாளரும் இதைத்தான் செய்திருக்கிறான்!
ஒருமுறை மாவோவிடம் அவரது மனைவி, செல்லும் இடத்திற்கெல்லாம் ஏன் இப்படி பெண்களை அழைத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அடுத்த பயணத்தில் தனது மனைவியை விட்டு விட்டு சென்றுள்ளார். ஒரிஜினல் சிந்தனை உள்ள புரட்சியாளர் மாவோ ஆட்சிக்காலத்தில் மூன்று கோடி பேர் அவருக்கே அறியாமல் இறந்துள்ளார்கள் என்பது குறித்து நாம் விமர்சித்திருக்கிறோம் தவிர ஒரு கேரேஜ் முழுவதும் பெண்களை அடைத்துக் கொண்டு சென்றுள்ளான், மன்னர்கள் என்ன செல்லுமிடத்திற்கு எல்லாம் குதிரையில் அழைத்துக் கொண்டு சென்றார்களா? இதெல்லாம் ஒரு பேச்சா?
செங்கோலிற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு:
பாண்டிய நெடுஞ்செழியன் தவறாக நீதி கூறியதால் ஒரு பெண் நேரடியாக நீ என்ன மன்னன்? என்று 18 வரிகளில் வழக்காடி, மன்னன் தான் கள்ளன் என்பதை ஒப்புக்கொள்ள வைத்தாள், நான் வாழ்வதற்கு தகுதியற்றவன் என்று இறந்தான். அவன் தவறாக கோவலனை கொன்ற பொழுது செங்கோல் வளைந்து விட்டது என்று இளங்கோவடிகள் சொல்கிறார். இதற்குப் பிறகு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தன் உயிரை விட்ட பிறகு நெடுஞ்செழியனின் உயிர் வளைந்து கிடந்த செங்கோலை நிமித்தி விட்டு சென்றது என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.
நம்முடைய ஆட்கள் என்ன செய்கிறார்கள் பாராளுமன்றத்திற்கு சென்று ஒரு அறிவு இல்லாமல், தமிழனின் அறிவு மட்டமான அறிவு என்பது போல பேசுகிறீர்களே! செங்கோலிற்கு எதிராக இந்த தமிழன் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசனும் பேசுகிறார் நீங்கள் எல்லாம் தமிழன் தானா? உலக மரபிலேயே மிகச் சிறந்த மரபு செங்கோல் மரபு தான், உலகத்தில் எந்த நாட்டிலும் அது கிடையாது. செங்கோல் என்றால் அறத்தின் அடையாளம். நீதியின் அடையாளம். திமுக மந்திரி செந்தில் பாலாஜி சிறைச்சென்றால் வெளியே கொண்டுவர பார்ப்பார்கள், சிறையில் இருந்தாலும் மந்திரிகளாக இருப்பதற்கே முயற்சி செய்வார்கள், இதெல்லாம் ஆட்சியா இதெல்லாம் நீதியா? யாரிடமும் சொந்த உறவு, ரத்த உறவுக்கு கூட நீதியின் கருணை காட்டக்கூடாது. அந்த நாற்காலியில் உட்கார்ந்து விட்டால் செங்கோலை பிடித்து விட்டால், கருணை காட்டக்கூடாது. அப்படி காட்டுகின்ற நிலைமை ஏற்பட்டால் உன் உயிரைப் போக்கி, நீ அதை ஈடுகட்ட வேண்டும் என நெடுஞ்செழியன் மூலமாக நமக்கு தெரியவருகிறது.
தமிழர்களின் சிறப்பை பெருமைப்படுத்திய மோடி:
வள்ளுவன் செங்கோலிற்கென்று ஒரு அதிகாரம் வைத்திருக்கிறான். பெண் அடிமைத்தனத்திற்கு அடையாளம் செங்கோல் என சு.வெங்கடேசன் கூறியது மோடிக்கான எதிர்ப்பு அல்ல! தமிழர்கள் ஒரு மரபை சிறந்து போற்றி இருக்கிறார்கள் என்று அந்த மனிதர் தமிழர்களின் சிறந்த ஒன்றை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறார். மோடி அவர்கள் அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் தமிழகத்தின் கலாச்சாரத்தை நாடாளுமன்றத்தில் நிறுத்தியதன் மூலம் தமிழக கலாச்சாரத்தை பெருமைப்படுத்தியுள்ளார். மேலும் அவருக்கு நல்லதைப் போற்ற வேண்டும் என்ற எண்ணமாவது இருந்தது, ஆனால் தமிழகத்திலிருந்து சென்ற முட்டாள்கள் அந்த செங்கோலை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று சு.வெங்கடேசன் செங்கோல் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியதற்கு பழ.கருப்பையா தனது கடுமையான வாதங்களை முன் வைத்துள்ளார்.