பத்திரிகையாளர்கள் சங்கமா? அடையாள அட்டை விற்கும் கடையா?
இன்றைய உலகில் உலக நடப்புகளை மக்களின் விரல் நுனியில் கொண்டு சேர்க்கும் பணியை செய்துவரும் பத்திரிகையாளர்கள் நலனை காக்கவும், அவர்களின் தேவைகளுக்கு குரல் கொடுக்கவும் தொடங்கிய *பத்திரிகையாளர்கள் சங்கங்கள், இன்று பரிணமித்து அரசியல் கட்சிகளை போலவும், ரசிகர் மன்றங்கள் போலவும் செயல்பட தொடங்கிவிட்டது*.
*தனி மனித புகழ்ச்சி, தற்பெருமை,சந்தா வசூல் வேட்டை, ஆளும் கட்சிக்கு ஆதரவு, அரசியல் கட்சிகளின் பின்புலம், அணி பிரிவுகள்* என சொல்லிக்கொண்டே போகலாம், *பத்திரிகையாளரில் ஏது அணிகள்?* சிலர் அரசியல், சினிமா, பொது என தளம் வேறுபடும், ஆனால் *பத்திரிகையாளர்களில் விவசாய அணி, கலை இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, தொழில்நுட்ப அணி, இளைஞர் அணி* என ஒரு அரசியல் கட்சிக்கு நிகரான அணிகளை கொண்டு சில அமைப்புகள் இயங்குகின்றன இந்நாளில்.
இதில் மறுக்க முடியாத உண்மை என்னவெனில் *இப்படிப்பட்ட சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஊடக துறை சார்ந்தவர்கள் இல்லை என்பது தான்*, வருடத்திற்கு 2000 சந்தா, அதற்கு *Press / Media என்ற பெயருடன் அடையாள அட்டை*, பெற்றவர்கள் சிலர் அதை மாட்டிக்கொண்டு *தன்னை ஒரு பத்திரிகையாளர் என கூறிக்கொண்டு தொழிலதிபர்களை / அரசு அதிகாரிகளை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகம்* நடைபெறுவது கொடுமையிலும் கொடுமை.
இப்படி பட்ட சங்கங்கள் சாதித்தது என்ன? *வள்ளுவர் கோட்டத்தில் வருடத்திற்கு 4-5 ஆர்ப்பாட்டம், 6-7 கண்டன அறிக்கை, பாராட்டு / வாழ்த்து அறிக்கை, மேலும் ஒரு மாநாடு / முப்பெரும் விழா* அரசியல் பிரமுகர்களை சிறப்பு அழைப்பாளர்களாக கொண்டு, இதை தவிர வேறென்ன இருந்துவிட போகிறது?
*பத்திரிகையாளர் சங்கம் என்பது இன்று Press / Media அடையாள அட்டை விற்கும் கடையை போல செயல்பட்டு வசூல் வேட்டையில் கொழுகின்றன*, தினமும் ஏதேனும் ஒரு மூளையில் செய்தியாளர்கள் தாக்கப்படுவதும் / அவமானப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருவது அனைவரும் அறிந்ததே, இதை தடுக்க இதுவரை இவர்கள் எடுத்த முன்னெடுப்பு என்ன? வழக்குகளில் சிக்கும் பத்திரிகையாளர்களை மீட்க எடுக்கும் நடவடிக்கை என்ன? வசூல் வேட்டையில் ஈடுபடும் செய்தியாளர்களை தடுக்க எடுத்த முன்னெடுப்புகள் என்ன? போலி பத்திரிகையாளர்கள் / சங்கங்களை ஒழிக்க இவர்கள் எடுத்த முன்னெடுப்புகள் என்ன? கடவுளுக்கே வெளிச்சம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே பிரபல ரவுடி சோனு பட்டாகத்தி கொண்டு கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன், அப்போது கைது செய்யப்பட்ட பெரும்பாலானோர் கையில் Press / Media அடையாள அட்டையை காவல் துறையினர் பறிமுதல் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன், இது இன்றும் தொடவதற்கு காரணம் so called பத்திரிகையாளர்கள் சங்கங்கள் தான், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இது தொடரும் இவர்கள் மூலம் அடையாள அட்டை பெற்றவர்கள் தொழிலதிபர்களை / அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், பணம் பரிப்பதும் தொடர்கதையாகும்...
*தொடர்ந்தால் பேனா முனை கத்தி முனையாகவோ / துப்பாக்கி முனையாகவோ மாறும் என்பது மறுக்கமுடியாத உண்மை.*
விழிக்குமா அரசு?
வினோத்குமார் ஆ. தலைமை ஒருங்கிணைப்பாளர் - DNI (Digital Newsmakers of India)