தளியில் நடைபெற்ற வேணுகோபால சுவாமி பிரம்ம ரதோற்சவம். திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு.

 *தளியில் நடைபெற்ற வேணுகோபால சுவாமி பிரம்ம ரதோற்சவம். திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு.* 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் உள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 

இந்த கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்ம ரதோற்சவ திருவிழா நிகழ்வாண்டில், கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.


திருக்கோவிலில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்களுடன் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. 

இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட திருத்தேரில், ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர். 

வேத விற்பன்னர்களின் சிறப்பு வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு மகா மங்கள ஆரத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

பின்னர், சௌபாக்யவத்தி  வேணுகோபால்

தளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டி இராமச்சந்திரன், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பிரம்மாண்ட திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த திருவிழாவினை ஒட்டி வந்திருந்த பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக இஸ்லாமிய அன்பர்கள் நீர்மோர் பானகம் குளிர்பானங்கள் வழங்கினார்கள். 

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடக மாநில பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்