NIOS பள்ளி சான்றிதழ் அரசு பணி, பதவி உயர்வுக்கு உகந்தல்ல

 NIOS பள்ளி சான்றிதழ் அரசு பணி, பதவி உயர்வுக்கு உகந்தல்ல

தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தினால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் துவங்கப்பட்டது.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விரும்பிய நேரத்தில் படித்து, விரும்பிய நேரத்தில் தேர்வினை எழுத முடியும். மேலும், இந்த படிப்பு சிபிஎஸ்இ-க்கு இணையானது என தேசிய திறந்த நிலை பள்ளி அறிவித்து செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில் தேசிய திறந்தநிலை பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்ததற்கு சமமானது என சான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவின் அடிப்படையிலும், உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், உயர்கல்வி மன்ற கூட்டத்தின் முடிவின் படி, திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் படித்து 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் பெறுபவர்களின் கல்வி தகுதியை தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிக்கு இணையாக கருத முடியாது. மேலும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர்விற்கு அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.