கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் பாதையாத்திரை நிகழ்ச்சி வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில்

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் பாதையாத்திரை நிகழ்ச்சி வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் 

*தமிழ்நாட்டில் பிஜேபியின் அரசியல் வரலாற்றில் காணாத எழுச்சி காரணமாக, பெரிய இயக்கமாக பிஜேபி மாறி உள்ளதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பது உண்மையாகி விட்டது - ஓசூரில் பிஜேபி மாநில செய்தி தொடர்பாளர், சி. நரசிம்மன் பெருமிதம்.*

தமிழ்நாட்டில் பிஜேபி தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும், என் மண் என் மக்கள் பாதையாத்திரை நிகழ்ச்சி வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 

இங்குள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொண்டர்களை சந்தித்து மக்களிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடி, இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ள நிலையில் இதற்கான விரிவான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட பிஜேபி நிர்வாகிகளும் தொண்டர்களும் மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் பிஜேபி மாநில செய்தி தொடர்பாளருமான, சி. நரசிம்மன் தெரிவிக்கையில், 

தமிழ்நாட்டில் தற்பொழுது அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரை வாயிலாக அவர் செல்லும் இடங்களில் எல்லாம் விழிப்புணர்வும் புரட்சியும் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆளும் கட்சிக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தலைமையில் பிஜேபி, தமிழ்நாட்டில், மாபெரும் வெற்றியை பெற்று பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கும். அதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு பிஜேபி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

அதேபோல 2026 சட்டமன்ற பொது தேர்தலிலும் பிஜேபி தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக ஆக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தற்சமயம் தமிழ்நாட்டில் பிஜேபியின் அரசியல் வரலாற்றில் காணாத எழுச்சி மக்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது, பெரிய இயக்கமாக பிஜேபி மாறி உள்ளதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பது உண்மையாகி விட்டது. 

10 ம் தேதி காலை, ஊத்தங்கரையிலும் பிற்பகலில் பர்கூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, கிருஷ்ணகிரியில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மறுநாள் 11ம் தேதி காலை, வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சார்பாக ராயக்கோட்டையிலும், தொடர்ந்து தளி சட்டமன்ற தொகுதியிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து அன்று மாலை ஓசூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சுற்றுபயணத்தை நிறைவு செய்கிறார்......என்று அவர் தெரிவித்தார்.

பேட்டி: சி. நரசிம்மன், பிஜேபி மாநில செய்தி தொடர்பாளர்