கெலமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்டம் நடைபெற்றது

 *கெலமங்கலம் வேளாண்மை  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்டம்  நடைபெற்றது.*

 கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் உள்ள எஸ் 527  வேளாண்மை  உற்பத்தியாளர்கள்  

விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது, இக் கூட்டத்துக்கு  சங்கத் தலைவர் ஹரிஷ் ரெட்டி தலைமையில்  துணைத்தலைவர் எம் கிருஷ்ணன். அன்பழகன் கூட்டுறவு  சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் உள்ளிட்டேர் கூட்டத்தில் சங்க வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சங்கத்தின் நடைபெற்ற  கூட்டத்தில் விற்பனையாளர்கள் ஒரு கடையிலிருந்து தலைவருக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டும் என ஒருசிலர் புரளி கிளம்பி வருகிறார்கள் அதை வன்மையாக கண்டித்தும், மேலும் நியாயவிலை கடைகளில் சேல்ஸ்மேன்  கூட்டம் நடத்தி அதில்  தலைவர் பெயரை சொல்லியே அல்லது உபயோகபடுத்தியே யார்ரேனும் பணம் மற்றும் பொருள் கேட்டாலும் கொடுக்க கூடாது என்று  முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

மேலும்  நியாயவிலைக் கடைகள்  மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களை நியாயமான முறையில் வழங்க வேண்டும் என்று தெரிவித்தவர்.

 இன்று நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் அவர் பேசிய போது சங்க வளர்ச்சிப் பணிகளிலே  இயக்குனர்களும். அதிகாரிகள் ஒத்துழைப்போடு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

1) சங்க வளர்ச்சிக்காக விவசாயிகள் நலனுக்காகவும் சங்க வளாகத்தில் குளிர்பதன கிடங்கு ஒன்று அமைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை  வலியுறுத்தி உள்ளோம்,

2 ) பெட்ரோல் பங்க்  ஒன்று  அமைக்க அரசாங்கத்தை  கேட்டிருக்கின்றோம்.

3) நியாய விலை கடைகள் உணவு சப்ளை செய்யும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டுள்ளார், அதனை பரிசளித்து உடனடியாக சம்பள உயர்வு பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்  தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கையாக வைப்பது

4) சங்கத்தில் உள்ள மேஜை, நாற்காலிகள் பழுதாகி உள்ள நிலையில் தேவைக்கேற்ப  மேஜை நாற்காலிகள் வாங்க நீதி ஒதுக்கீடு செய்வதும்,

மேலும் தாண்ணிங்கள் சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்களை ஒன்றை அமைத்து கொடுக்கும் மாறு  அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும்,

 இன்று நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தின் கூட்டத்தில் சில தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

B.S. Prakash