மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ....?!

 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்  ....?!

வேலூர்மாவட்டம்,வேலூர் கஸ்பா பகுதியில் சேர்வை கே.மாசிலாமணி உயர்நிலைப்பள்ளி உள்ளது இதில் தலைமை ஆசிரியராக கருப்பன் (மாற்றுத்திறனாளி பார்வையற்றவர்) பணியாற்றி வருகிறார்.

  இவர் அங்குபயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாகவும் ஆண் மாணவர்களை தகாத வார்த்தை களால் திட்டுவதாகவும் பணிபுரியும் பெண் ஆசிரியைகளிடமும் தகாத முறையில் நடக்க முயற்சி செய்வதாகவும் கூறி வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபாவிடம் மாணவர்களும் மாணவிகளும் நேரில் வந்து புகார் தெரிவித்தனர் .

  ஆனால் மாவட்ட கல்வி அலுவலா நேசப்பிரபா புகார் கொட்டுக்க வந்தவர்களை அலட்சியப்படுத்தி மூன்று நாட்கள் பொறுத்து வருவதாகவும் இதனை விசாரிக்க முடியாது தனக்கு வேலை இருப்பதாகவும் கூறி திருப்பி அனுப்பி யுள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

  தமிழக முதல்வர் பாலியல் சீண்டல்கள் சிறுமிகளிடமும் சிறு குழந்தைகளிடமும் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் புகாரை கூட காதுகொடுத்து கேட்காமல் அலைகழித்துள்ளனர்.

தலைமை ஆசிரியர் தான் மாற்றுத்திறனாளி என்ற சாக்கை வைத்துகொண்டு தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.  மாணவர்களின் தரப்பில் விசாரித்த போது இதெல்லாம் உண்மை என தெரியவந்துள்ளது எனவே கல்வித்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி தலைமை ஆசிரியரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

  இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் தொலை பேசியில் கேட்ட போது பள்ளிக்கு நேரில் வாருங்கள் என பதிலை கூறினார் மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி அவர்களிடம் கேட்ட போது அவர் தன் கவனத்திற்கு புகார் வரவில்லை நாளையே விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தகவலை தெரிவித்தார்.

  மாவட்ட கல்வி அலுவலா நேசப்பிரபா தான் கைவிட்டுவிட்டார்., முதன்மை கல்வி அலுவலராவது கைகொடுப்பாரா....!

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்