கிருஷ்ணகிரியில் கிழக்கு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு

கிருஷ்ணகிரியில் கிழக்கு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு .....

கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிழக்கு மேற்கு ஒருங்கிணைந்த ஒன்றிய செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையில்  நடைபெற்றது.இக் கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், மாநில ஆசிரியர் கூட்டணி துணைத் தலைவர் தமிழ்மணி தனது ஆதரவுகளுடன் செயற்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார். அப்போது மாவட்ட செயலரிடம் மாநில பொறுப்பில் உள்ள எனக்கு எவ்வித முன்னறிவிப்பும் தகவலும் கொடுக்காமல் நீங்கள் கூட்டம் நடத்துவது தவறு என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகள் தமிழ்மணி இடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தமிழ்மணி தங்களுடைய ஆதரவாளர்களுடன் அங்கிருந்து வெளியே சென்றார். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிருஷ்ணகிரியில் கிழக்கு மேற்கு ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டத்தில் நடந்த சலசலப்பு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

K. Moorthi Reporter