உலக நன்மை வேண்டி ஓசூரில் ஸ்ரீ பிரத்தியங்கிரா திருக்கோயில் சுமங்கலிகள் பங்கேற்ற திருவிளக்கு குங்கும அர்ச்சனை பூஜை

 *உலக நன்மை வேண்டி ஓசூரில் ஸ்ரீ பிரத்தியங்கிரா திருக்கோயில் சுமங்கலிகள் பங்கேற்ற திருவிளக்கு குங்கும அர்ச்சனை பூஜை.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி சுமங்கலிகளின் கரங்களால் திருவிளக்கு குங்கும அர்ச்சனை பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடுகள் நடத்தினர்.

மோரணப்பள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவு நேரத்தில் மிளகாய் வத்தல் யாகம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்கின்றனர். 

இந்த நிலையில் உலக நன்மை வேண்டியும் மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா அம்மனை நோக்கி சுமங்கலிகளின் கரங்களால் திருவிளக்கு குங்கும அர்ச்சனை பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது. 

முன்னதாக காலை முதல் பூரண கும்ப கலசங்கள் வைத்து யாக பூஜை நடைபெற்றது. பின்னர் கணபதி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகிய நடைபெற்றதை அடுத்து பூரனாஹூதி சமர்ப்பித்தல் நடைபெற்றது. 

இந்த வைபவத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு முன்பு அமர்ந்து குங்கும அர்ச்சனையை செய்தனர். பின்னர் அம்மனுக்கு மகா மங்கள ஆரத்தி சமர்ப்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.