21 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை கே பி முனுசாமி திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன அல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அலே குந்தாணி கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 21 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை கழகத் துணைபொதுச் செயலாளர் வேப்பன பள்ளி சட்டமன்ற உறுப்பினர் திரு கே பி முனுசாமி அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு கே அசோக்குமார் அவர்கள் தலைமையேற்று ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு டி எம் தமிழ்செல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார் அவ்வூர் பொது மக்களுக்கு மதிய உணவினை தயார் செய்து அதை தானே முன்னின்று பரிமாறினார் கிராமத்தில் மற்றொரு நிகழ்ச்சியாக கழக கொடியினை மாவட்ட கழக செயலாளர் அவர்கள் ஏற்றி வைத்தார் தொகுதியைச் சார்ந்த அனைத்து ஒன்றிய கழகச் செயலாளர்களும் கழக பொறுப்பாளர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.