பொருளாதாரத்தில் உலகை வெல்லும் இந்தியா...! பிரதமர் மோடியின் அசத்தல் சாதனை....!!
உலக அளவில் இந்த ஆண்டும் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. அதேபோல இந்தியாவும், சீனாவும் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் என்றும் கூறியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று உயிரிழப்புகளை கடந்து கடுமையான பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியது. பல நாடுகளின் பொருளாதாரம் மைனஸில் சென்றது. ஆனால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்னர் நிலைமை ஓரளவு சீரானது. எனவே மீண்டும் உலகம் பழைய மாதிரி இயங்க தொடங்கியது. இப்படி இருக்கையில்தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியது. இந்த போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் கடுமையான சிக்கலை எதிர்கொண்டன.
அதேபோல உக்ரைனிலிருந்து தானியங்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் நெருக்கடியில் சிக்கின. எனவே மீண்டும் சர்வதேச பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில்தான் 2023ம் ஆண்டு உலக நாடுகளின் நிலை எப்படி இருக்கும் என்று ஐம்எஃப் கூறியுள்ளது. அதாவது இந்த ஆண்டு உலகம் முழுவதும் வெறும் 3 சதவிகிதத்திற்கும் குறைவான அளவில்தான் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று ஐஎம்எஃபின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.
இது இந்த ஓராண்டுக்கு மட்டும் அல்லாது அடுத்த 5 ஆண்டுகளுக்கும் பொருந்தும். அதாவது 2028 வரை உலகம் முழுவதும் 3%க்கும் குறைவான அளவில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனவும் ரஷ்ய-உக்ரைன் மோதல் போக்கு இந்த ஆண்டும் நீடிக்கும் எனவும் ஜார்ஜீவா கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவு குறைவான வளர்ச்சி இருக்கும் என நாங்கள் அறிவிப்பது இதுதான் முதல் முறை. அதேபோல கடந்த 20 ஆண்டுகளாக உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை எடுத்து அதன் சராசரியை கணக்கிட்டு பார்த்தால் இந்த காலகட்டங்களில் உலகம் 3.8% வளர்ச்சியை கடக்கவில்லை என்பதை நாம் உணராலாம்.
வளர்ந்து வரும் நாடுகள்தான் இனி உலகத்திற்கு ஒளியூட்ட போகிறது. குறிப்பாக ஆசியா! இங்கு உள்ள இந்தியா-சீனா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு உலகின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் சரி பாதியை கொண்டிருக்கும். கொரோனா தொற்று அதன் தொடர்ச்சியா ரஷ்யா-உக்ரைன் மோதல் ஆகிய காரணங்கள்தான் இந்த பொருளாதார சரிவுக்கு காரணம். இதனால் பசி மற்றும் வறுமை முன்னெப்போதைவிட அதிகமானதாக இருக்கும். அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும். 90% வளர்ச்சியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடுகள் இந்த ஆண்டு சரிவை சந்திக்கும்.
அதேபோல குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் ஏற்றுமதியில் சிக்கலை சந்திக்கும். எனவே அதிக அளவில் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படும்" என்றும் ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி ஒன்றுமே செய்யவில்லை என்று அவரை அவதூறாக பேசிக் கொண்டிருக்கின்ற சுயநல அரசியல்வாதிகளின் காதில் உரக்க படுகிற மாதிரி இந்த விஷயத்தை அனைவருக்கும் சொல்லுங்கள்....