தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு......!

 தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு......!

ஜி ஸ்கொயர் என்னும் பிரபல கட்டுமான நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் செய்து வரும் இந்நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனிடையே, ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் பரபரப்பு குற்றம்சாட்டினார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், திமுக அரசு இந்நிறுவனத்திற்கு சாதகமான வேலைகளை சட்டவிரோதமாக செய்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அந்நிறுவனம், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வியாபாரம் செய்து வருவதாகவும், தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் கூறியிருந்ததது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துபட்டு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

அண்ணாமலை ஜி ஸ்கொயர் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு திடீரென்று நடத்திவரும் இந்த சோதனையால் அண்ணாமலை ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து திமுகவினரும் ஆடிப் போய் உள்ளனர். கடந்த வாரம் வரை அண்ணாமலை 500 கோடி தர வேண்டும் ஆயிரம் கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பிக்கொண்டிருந்தவர்கள் இப்போது அடுத்த ஆப்பு என்ன வருமோ என்ற அதிர்ச்சியில் உள்ளனர்.

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்