நாக முனீஸ்வர ஸ்வாமி கோயில் தேர் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு

 நாக முனீஸ்வர ஸ்வாமி கோயில் தேர் திருவிழா :  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் ஜக்கேரி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னகுறுக்கி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ நாக முனீஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது.  சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது மறு சீரமைப்பு செய்து புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் இன்று ரதோச்சவம் எனப்படும் தேர் திருவிழா நடைபெற்றது. தேர் திருவிழாவை முன்னிட்டு நாக முனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சாமி அமர வைக்கப்பட்டு பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தன அப்போது அனைவரும் பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த கோயிலில் தேரு திருவிழா நடைபெறும் நாளை கோயிலில் குரக்ஷ்சேத்திரம் என்ற நாடகம் நடைபெறுகிறது.

B. S. Prakash