சரஸ்வதி தேவியை வழிபட்ட மாணவ- மாணவியர்

 சரஸ்வதி தேவியை வழிபட்ட   மாணவ- மாணவியர் 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா, தளி ஒன்றியம், கும்மளாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ- மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முழுமையான தேர்ச்சி பெற கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவியை வழிபட்டனர். 

மிகவும் விமரிசையாகவும் பக்தியுடனும் அனைவரும் பங்கேற்க பூஜையானது அமைந்தமை சிறப்பு.

மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. N.தனலட்சுமி,M.SC.,M.ED.,M.PHIL., அவர்கள் தலைமையேற்க உதவித் தலைமையாசிரியர் திரு.V. இரவிசந்திரா,M.A., B.ED., அவர்கள் , S.M.C .தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

இப்பள்ளியில்ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை 236 மாணவ-மாணவியர் பயிலும் இருபான்மைப்பள்ளியாகும்.

மேலும் , இப்பள்ளி கன்னடம்மொழி பயிற்றுமொழியாகக்கொண்டு செயல்படும்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

2008ஆம் ஆண்டுதரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி.2009-2010ஆம் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று முழுமையான தேர்ச்சிபெற்று வருவது சிறப்பானதும் பெருமையானதுமாகும்.

தலைமையாசிரியர் வரவேற்புரை வழங்க, உதவித்தலைமையாசிரியர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.