பொதுசெயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட வரவேற்று ஓசூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

பொதுசெயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட  வரவேற்று ஓசூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

 அதிமுக பொதுக்குழு செல்லும் என்கிற தீர்ப்பையும், பொதுசெயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட  வரவேற்று ஓசூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுசெயலாளர்  தேர்தல் முடிவுகள் எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்து வந்தார், இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த அவர், இன்று காலை தீர்ப்பளித்தார்

தீர்ப்பில் ஜுன் மாதம் நடந்த பொதுக்குழு செல்லும், பொதுசெயலாளர் தேர்தல் முடிவினை வெளியிட தடையில்லை என உத்தரவிட்டார்

நீதிமன்ற தீர்ப்பையும் அதிமுக பொதுசெயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட உள்ளதை வரவேற்றும்

பாகலூர் சாலையில் உள்ள அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான  பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களின் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் மதன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஸ், இளைஞர் பாசறை மாவட்ட  செயலாளர் ராமு, முன்னாள் நகர செயலாளர் நாராயணன், பகுதி செயலாளர்கள் ராஜீ,மஞ்சுநாத்,அசோகா, வாசுதேவன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிவக்குமார்,  உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்...

Hosur Reporter. E. V. Palaniyappan