2024-25 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம்....! தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் கலைக்கப்படுகிறதா.....?

 2024-25 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம்....! தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் கலைக்கப்படுகிறதா.....?

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் 2024-25 கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆர்டி திட்டமிட்டு வருகிறது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின்
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆர்டி திட்டமிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024-25 கல்வி ஆண்டு முதல் இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிகிறது. புதிய கல்விக்கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத்திற்கு வேலையே இல்லாமல் போய்விடும். அதனால் அந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடும். அப்படி கலைக்கப்பட்டால் எதிர்க்கட்சிகளை கண்டபடி கலாய்த்து வருகின்ற திண்டுக்கல் லியோனியின் பதவியும் பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அது மட்டுமல்ல CBSE., ICSE, Oriental என்று பல்வேறு விதமான பாடத்திட்டங்களை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்ற சில கல்வி நிறுவனங்களின் கூடாரங்களும் ஒழிந்து விடும். ஆடம்பர அஸ்திவாரங்களும் அழிந்துவிடும்.