விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைப்பயணம் செய்ய முயன்ற 200க்கும் மேற்ப்பட்டோர் கைது

 விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைப்பயணம் செய்ய முயன்ற 200க்கும் மேற்ப்பட்டோர் கைது

ஓசூர் அருகே விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி நடைப்பயணம் செய்ய முயன்ற 200க்கும் மேற்ப்பட்டோர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உத்தனப்பள்ளி,நாகமங்கலம்,அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 3800 ஏக்கர் நிலப்பரப்பில் 5வது சிப்காட் அமைக்க தமிழக அரசு விளைநிலங்களை கையகப்படுத்தி வரும் நிலையில்

இதனை கண்டித்து விவசாயிகள்  58வது நாளாக உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில்,

 இன்று மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி நடைப்பயணம் மேற்க்கொள்வதாக அறிவிப்பு விவசாயிகள் அறிவிப்பு செய்திருந்தநிலையில் 250 போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.. போலிசார் விவசாயிகளிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

விவசாயிகள்,பெண்கள்  அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி நடைப்பயணம் மேற்க்கொண்டபோது போலிசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் திடீரென ஒசூர் - இராயக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

பின்னர் போலிசார் 200க்கும் மேற்ப்பட்ட விவசாயிகளை குண்டுகட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றியபோது விவசயி ஒருவர் காவல் வாகனத்தின் டயரில் தலை வைத்து படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது

கைது செய்த 200க்கும் அதிகமானோர் தனியார் மண்டபத்திலஃ தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

B. S. Prakash 

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்