ஓசூரில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

 ஓசூரில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூரில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

ஓசூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

 ஓசூர் மாநகராட்சியின்  நான்காவது மண்டல குழு தலைவர் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர்   ஜே.பி என்கிற ஜெயபிரகாஷ் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் பகுதி செயலாளர்கள் ராஜுவ், மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் பகுதிகாலக செயலாளருமான  மஞ்சு, மாநகராட்சியின் நகரமைப்புக்குழு தலைவரும் பகுதி கழக செயலாளர் ஆன அசோகா ரெட்டி, ஹரி பிரசாத் அக்ரோ தலைவர்,ஒன்றிய செயலாளர் ஹரிஷ் ரெட்டி, மாமன்ற உறுப்பினர்கள் , லட்சுமி ஹேமகுமார், சில்பா சிவகுமார், சிவராமன், ரகுமான்,வட்ட செயலாளர் ஆனந்த பாபு ராமச்சந்திரன், அரப் ஜான், பக்ஷு பாய், சார்பணி மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

E. V. Palaniyappan