தேன்கனிகோட்டையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா

 தேன்கனிகோட்டையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா 

புரட்சிதலைவி தமிநாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 75ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பழைய பேருந்துநிலையத்தில், 75 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா

பந்தல் அமைத்து ஜெயலலிதா அவர்களின் உருவ படம் வைத்து, மாலை அணிவித்து, மலர்தூவி, பூஜை செய்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, அண்ணதானம் செய்து வெகுசிறப்பாக, கொண்டாடினர், இந்த நிகழ்ச்சி நகர செயலாளர் ஜெயராமன், தலைமையில் கொண்டாடப்பட்டது, இதில் முன்னாள் தேன்கனிகோட்டை பேரூராட்சி தலைவர் சி.நாகேஷ், முன்னாள் துணை தலைவர் டிஎல். ராமன். 17வது வார்டு கவுன்சிலர் மாது பழனிசாமி, கெலமங்கலம் ஒன்றிய 

அவை தலைவர்பழனிசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள், ராமமூர்த்தி, பூசுமனி, ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், நகர செயலாளர் ஜெயராமன். பேசுகையில், அதிமுக நிரந்திர பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றுகூடி அதிமுக அம்மா வழி அரசியில் பொதுமக்களுக்கு கொடுப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்,

இதேபோல் தேன்கனிகோட்டை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 

அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பாக, குண்டுமணி தலைவர், செயலாளர் அண்ணாதுரை, தலைமையில், ஜெயலலிதா அவர்களின் உருவ படம் வைத்து மலர் தூவி பூஜை செய்து வணங்கி, பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது, இந்த விழாவில், பொருளார் சுப்பிரமணி, துணை செயலாளர் வேல், விபத்து பிரிவு செயலாளர் ஸ்ரீதர், பொருப்பேற்று விழாவினை சிறப்பித்தனர்,

B. S. Prakash