ஆறு வயதில் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு....!
1ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. 6 வயது முடிந்த பிறகு 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
3 வயதில் பிரி - பிரைமரி வகுப்பில் சேர்க்கலாம், 3 ஆண்டுகள் பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி பயில வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களின் சேர்க்கை வயதை உயர்த்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வரும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் மாணவர்களின் தொடக்க கல்வி பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் கல்வி ஆண்டில் இருந்து இந்த முறை கட்டாயப்படுத்த படுகின்றது.