39 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகளுக்கு தளி சட்ட மன்ற உறுப்பினார் பூமி பூஜை...........
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ஜெ. காருபள்ளி ஊராட்சியில் கதிரடிக்கும் களம், கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் ரோடு, ப்ளவார் பிளாக் சாலை, மயாணத்துக்கு சுற்று சுவர் போன்ற வளர்ச்சி பணிகளுக்கு தளி சட்ட மன்ற உறுப்பினர் டி. ராமசந்திரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். பூஜையில் ஒன்றிய குழு துணை தலைவர் ஸ்ரீனிவாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி ரவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், பிரசாந்த், ஜெயராம்.வார்டு உறுப்பினர் முனிகிருஷ்ணன், முன்னாள் தலைவர் கிருஷ்ணப்பா, நாகராஜ் போன்ற பலர் கலந்துகொண்டனர்.
B. S. Prakash