2023-24 கல்வி ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு....!

2023-24 கல்வி ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு....!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இதன் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை அல்லாத  தனியார் பள்ளிகள் மற்றும் மானியம் பெறாத தனியார் பள்ளிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கென 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் (2023-24) கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வருகிற மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களை அறிய பள்ளி கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்
எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?
படம்