செய்தி நிறுவனங்களுக்கு கூகுள் பேஸ்புக் வருவாயை பகிர்ந்து அளிக்க வேண்டும்: மத்திய அரசு கோரிக்கை....!

 செய்தி நிறுவனங்களுக்கு கூகுள் பேஸ்புக்  வருவாயை பகிர்ந்து அளிக்க வேண்டும்:  மத்திய அரசு கோரிக்கை....!

 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் டிஜிட்டல் செய்தி ஊடகங்களுடன் தங்களின் வருவாயை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை செயலாளர் அபூர்வா சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தித் துறையில் உண்மையில் செய்திகளை உருவாக்கி வெளியிடுவதில் டிஜிட்டல் செய்தி தளங்கள் முன்னிலை வகிக்கின்றன. அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளை தொகுத்து கூகுள், பேஸ்புக் போன்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒரு பைசா செலவில்லாமல் காப்பி பேஸ்ட் செய்து தங்கள் நிறுவனத்தின் பெயரை பிரம்மாண்டமாக வளர்த்துக் கொண்டுள்ளனர். 

ஆனால் இதனால் தினந்தோறும் கஷ்டப்பட்டு நல்ல செய்திகளை நாட்டிற்கு வழங்கும் சாதாரண டிஜிட்டல் செய்தியாளர்களுக்கு ஒரு நன்மையும் கிடைப்பதில்லை. 

இதன் மூலம் தினந்தோறும் கிடைக்கின்ற like's மட்டும் பார்த்து ஆனந்தப்பட்டு கொள்கிறார்கள். வேறு எந்த லாபமும் இவர்களுக்கு இல்லை. எனவே இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கு பெரிய நிறுவனங்கள் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படைப்பாளர்களுக்கு நியாயமான பங்களிப்பை வழங்குவதற்கு வழி செய்வதற்காக சட்ட நடைமுறைகள் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனில் அமலில் உள்ளன.

 கொரோனா பாதிப்பிற்கு பிறகு அச்சுத்துறை மட்டுமல்ல டிஜிட்டல் செய்தி துறையும் நிதி ரீதியாக பெரும் சிக்கலில் இருக்கின்றது. இதுபோல நமது பாரம்பரியமான செய்தித்துறை தொடர்ந்து எதிர்மறையான தாக்குதல்களை சந்தித்தால் நாட்டின் நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிக்கை துறை கடுமையாக பாதிக்கப்படும். எனவே தேசத்திற்கு சேவை செய்யும் வரலாற்று சிறப்பு கொண்ட ஊடகத்துறையை காப்பாற்ற வேண்டும் என்று அபூர்வ சந்திர தெரிவித்துள்ளார்.

மத்திய செய்தித் துறை செயலாளரின் இந்த கோரிக்கை உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும். இதற்காக தனி சட்டம் கொண்டுவர மத்திய அரசை அவர் வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் இது சாத்தியமாகும்.

 அவரின் இந்த முயற்சியை மக்களாட்சி வரவேற்கிறது வாழ்த்துகின்றது.....