18 வாலிபர்கள் தர்கா நிர்வாக கமிட்டிக்கு சொந்தமானது

 18 வாலிபர்கள் தர்கா நிர்வாக கமிட்டிக்கு சொந்தமானது

ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் அருகில் உள்ள கீழக்கரை 18 வாலிபர் தர்க்கா சம்பந்தமாக கடந்த வெள்ளிக்கிழமை 13.1.23 அன்றுஜும்மா தொழுகை முடிந்தவுடன் அந்தப் பகுதியில் உள்ளசீனி இப்ராஹிம் உள்ளிட்ட பொதுமக்கள் அதை நிர்வகித்து வரும் பேங்க் மரைக்கா என்ற முகமதுஅப்துல் காதர் மீதும் அவரைச் சார்ந்தவர்களின் மீதும் புகார் தெரிவித்து நிருபர்களிடம் பேட்டி அளித்தனர்.அதற்கு பேங்க் மரைக்காஎன்ற அப்துல் காதர் அந்த குற்றச்சாட்டை மறுத்து பதில் அளித்து நமது நிருபரிடம் கூறியதாவது:

கீழக்கரை 18 மொட்டையர் பள்ளிவாசல் நான் தலைவராக இருந்து வருகிறேன்.இடம் 18 வாலிபர்கள் தர்கா நிர்வாக கமிட்டிக்கு சொந்தமானது அது சம்பந்தப்பட்ட அனைத்து தசாவேதிகளும் என்னிடத்தில் உள்ளது.இந்த நிர்வாகத்தை நான் முறைப்படி நடத்தி வருகிறேன் இது சம்பந்தமாக கீழக்கரை வட்டம் கீழக்கரை குரூப் உள்ள அனைத்து எண்ணில் உள்ள அனைத்து பகுதிகளும் 18 வாலிபர் தர்கா நிர்வாகக் கமிட்டிக்கு உட்பட்டது நாங்கள் மேளத்தெரு உஸ்வத்துல் ஹஜரா சங்கத்திற்கு சம்பந்தப்பட்ட ஒரு இன்ச் இடத்தை கூட நாங்கள் எடுக்கவில்லை எங்கள் 18 வாலிபர்கள் கமிட்டிக்கு சொந்தமான இடத்தில் தான் நாங்கள் பி எஸ் என் எல் டவர் வைத்துள்ளோம் எங்கள் இடத்தை அவர்கள் தான் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து பல லட்சத்திற்கு விற்று உள்ளார்கள் ஆகவே பக்குவோடு இடம் என்று சொன்னால் அவர்கள் தாராளமாக வந்து எடுத்துக் கொள்ளலாம் பல இடங்களில் சொல்லப்பட்ட சம்பந்தப்பட்ட இடங்களை எடுத்து வருகிறார்கள் அதேபோல எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே இதை ஏன் இப்படி சொல்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை. 1918ம் வருடம் முதல் கீழ்க்கரை நகராட்சிக்கு சொத்து வரி கட்டிய ரசீது உள்ளிட்ட அனைத்து பத்திரங்களும் என்னிடம் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பொய்யான தகவல்களைக் கூறிவருகிறார்கள், என்று அவர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி