ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மேற்கு ஒன்றியம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் டி ஜி எஸ் அழகர்சாமி தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெருங்குளம் பட்டணம் காத்தான் ராமநாதபுரம் ஈசிஆர் சாலை ஆகிய மூன்று இடங்களிலும் தமிழக முன்னாள் முதல்வர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட அஇஅதிமுக (ஓபிஎஸ் அணி)தலைவர் ஆர். எஸ்.மடை ராஜேந்திரன் இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் வக்கீல் முத்து முருகன், ராமநாதபுரம் கிழக்கு நகர்ச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மாவட்ட இணைச்செயலாளர் சித்ரா ராமநாதபுரம் பால் சொசைட்டி தலைவர் கங்கா கருடன் உள்ளிட்ட ஒன்றிய நகர கிளைக் கழகச் செயலாளர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள் இதற்கான ஏற்பாட்டினை ஒன்றிய செயலாளர் பொறியாளர் டி.ஜி. எஸ்.அழகர்சாமி மிகச் சிறப்பாக செய்திருந்தார். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனி மாரி,பாம்பன் ஊராட்சி செயலாளர் ராமசுப்பிரமணியன்.மனோகரன் கார்மேகம் தினேஷ் ரமேஷ், முத்துப்பாண்டி, துரை, சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் பிரான்சிஸ்,உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி