ஓசூரில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதா தேவியார் சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மாநில மாநாடு

 ஓசூரில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதா தேவியார் சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மாநில மாநாடு


*ஓசூரில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதா தேவியார் சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மாநில மாநாடு. கிராமப்புற மலைவாழ் மக்களின் ஆன்மீக கலை நிகழ்ச்சிகளுடன் அற்புத கொண்டாட்டம்.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதா தேவியார் சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 30வது மாநில மாநாடு நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் மாநாட்டில் சாது பெருமக்கள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலாம் நாளான இன்று ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் மற்றும் அன்னை சாரதா தேவியாரின் அவதார நோக்கம் குறித்து சொற்பொழிவுகள் நடைபெற்றன இதைத் தொடர்ந்து பஜனைகள் மற்றும் ஆரத்திகள் நடைபெற்றது. 

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில், மஞ்சி மலை கிராம மலைவாழ் மக்கள் சார்பில் ஸ்ரீ திம்மப்பா பஜனை மண்டலியினர் பங்கேற்ற பஜனைகள் நடைபெற்றன. அதேபோல கிராமப்புற பகுதியான தேன்கனிக்கோட்டை ஸ்ரீ சாரதேஸ்வரம் இல்லத்தைச் சார்ந்த மலைவாழ் பெண்கள் நிகழ்த்தி காட்டிய அன்னை சாரதா தேவியின் காளி அவதார நடன நிகழ்ச்சி பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 

தொடர்ந்து வாய் பேச முடியாத, கண்பார்வையற்ற மற்றும் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்று நிகழ்த்தி காட்டிய தாய் மண்ணே வணக்கம் பாடலுக்கு தேசிய உணர்வை ஊட்டும் வகையில் ஆடிய நடனம் பார்ப்பவர்கள் அனைவரது நெஞ்சங்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

பின்னர் அஞ்செட்டி மலைவாழ் பகுதியைச் சார்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் ராமாயண காதையில் வரும் பரதன் ராமரின் பாதுகையை கொண்டு ஆட்சி செய்யும் நிகழ்ச்சியும் ராமன் வனவாசத்திற்கு செல்லும் நிகழ்ச்சியும் தத்ரூபமாக நடித்துக் காட்டி திறமைகளை வெளிப்படுத்தியது நாட்டுப்புற கலைகளுக்கு இன்னும் உயிரோட்டம் உள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது என்பதற்காக ஏற்றார் போல நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிகளில் ஆன்மீக அன்பர்கள் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு மனதார ரசித்து கண்டுகளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், பாண்டுரங்கன் கூறுகையில், 

தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகானந்த பாவ பிரச்சார பரிஷத் சார்பில் தொடர்ந்து 29 ஆண்டுகளாக இது போன்ற ஆன்மீக மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 30 ஆவது மாநில மாநாடு ஓசூரில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ராமகிருஷ்ணரின் உபதேசங்கள், அன்னை சாரதா தேவியாரின் அவதார மகிமை மற்றும் சுவாமி விவேகானந்தரின் இளைஞர்களை தட்டி எழுப்பும் கொள்கைகள் இவைகள் யாவும் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் நோக்கிலும், குறிப்பாக கிராமப்புற மலைவாழ் இளைஞர்கள் மனதில் சென்றடையும் விதமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கு நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் அரங்கமே நிரம்பி வழிந்து அனைவரும் இதனை கண்டு களித்து ஆர்வமுடனும் மனதின் முழு ஈடுபாட்டுடனும் ரசித்து வருவது உண்மையிலேயே விவேகானந்தரின் கொள்கைகள் இளைஞர்களை சென்று அடைந்துள்ளது என்ற நம்பிக்கையை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

பேட்டி : எஸ் பாண்டுரங்கன், கன்வீனர் தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகானந்த பாவ பிரச்சார பரிஷத்.

Visual in FTP

HOSUR RAMAKRISHNA DEVOTEES STATE CONFERENCE 1, 2 BYTE 

Hosur Reporter. E.V. Palaniyappan