அரையாண்டு விடுமுறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம்...!?

அரையாண்டு விடுமுறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம்....!?

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒன்று முதல்  ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 2023 ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் துவங்கும்.

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தப்படி 2023 ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறை நீட்டிப்பு அரசு பள்ளிகளுக்கு மட்டும் பொருந்துமே தவிர தனியார் பள்ளிகளுக்கு எந்த விதத்திலும் பொருந்தாது. ஏனென்றால் அரசு பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய என்னும் எழுத்தும் போன்ற பயிற்சிகள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

 எனவே தனியார் பள்ளிகளில் செயல்படும் அனைத்து வகுப்புகளும் இரண்டாம் தேதி முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.