அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!

 அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு ஓபிஎஸ் அணியின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய  செயலாளர் அழகர்சாமி, ஏற்பாட்டில் ராமநாதபுரம் ஈசிஆர் சாலை அருகில் மாவட்ட தலைவரும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவருமான எஸ். ராஜேந்திரன் தலைமையில் தேங்காய்கள் உடைத்துமலர் தூவி  அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிறுபான்மை மாவட்ட செயலாளர் எம்.டி.அஸ்லம்முன்னில வகித்தார்.

 இதில் ராமநாதபுரம் தொகுதி செயலாளர் முத்துப்பாண்டி, விவசாய அணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பட்டணங்காத்தான் ஊராட்சி செயலாளர் பாலா, மூர்த்தி, மற்றும் பொறியாளர்கள் முருகன், மயில் ராஜா, ஸ்டான்லி, மனோராஜ், விஸ்வநாதன், விஜய், தாமு, தினேஷ், சத்யேந்திரன் மற்றும் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த பிற அணி நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டனர். இதில் மண்டபம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அழகர்சாமி, சபரிமலைக்கு அருள்மிகு ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக சென்றுவிட்டதால் அவரது ஏற்பாட்டில் எம்ஜிஆர் படத்திற்குமலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.    

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்