எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்த பா.ஜ.க......!

 எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்த பா.ஜ.க......!

எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக கூட்டணி பிரமாதமாக அமையும் என்றே தெரிகிறது. இதில் ஓபிஎஸ்ஸின் ரோல் என்ன என்பதுதான் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது.

அதிமுக என்ற கட்சி 95 சதவீதம் தனக்கு உள்ளதாகவே கூறப்பட்டு வந்தநிலையில், ஒற்றை தலைமை விவகாரத்திலும் உறுதியாக நின்றார் எடப்பாடி.. ஆனால், அதிமுகவுக்கு பிரதான தலைமை இருப்பதை பாஜக விரும்பாத நிலையில், எடப்பாடிக்கான ஆதரவை இதுநாள் வரை தராமலேயே இருந்தது. மாறாக, ஓபிஎஸ்ஸுக்கு பல வழிகளில் மறைமுகமான ஆதரவையும் தந்து வந்தது.. மேற்கண்டவாறு, ஓபிஎஸ் ஆதரவாளர்களே சொல்லும் அளவுக்குதான், ஓபிஎஸ்ஸை பாஜக மேலிடம் தூக்கி பிடித்தது.

ஆனால், ஓபிஎஸ் அவைகளை சரியாக பயன்படுத்தி கொண்டாரா? என்பதுதான் சந்தேகமாக  எழுந்துள்ளது.. ஆரம்பத்தில் ஒருசிலர் ஓபிஎஸ் பக்கமிருந்து திமுகவுக்கு தாவியபோதுகூட, எடப்பாடி தரப்பில் இருக்கும் முக்கிய நபர்களுக்கு ஓபிஎஸ் வலை விரிப்பதாகவும், விரைவில் அவர்கள் இணைந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. ஆனால், இப்போது வரை யாருமே அப்படி எடப்பாடி தரப்பில் இருந்து செல்லவில்லை.

 மாறாக, கோவை செல்வராஜ் போன்ற முக்கிய நபர்தான் விலகி வந்துள்ளார். கோவை செல்வராஜ்ஜை, ஓபிஎஸ் நழுவவிட்டது, அவரது சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.

எடப்பாடிக்கு நிகரான ஆதரவுகள் ஓபிஎஸ்ஸுக்கு இல்லை என்பது நிதர்சனம் ஆகி உள்ளது. தென்மண்டலத்தில், முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை அள்ளும் சக்தியும் ஓபிஎஸ்ஸுக்கு  இல்லை என்று சொல்லப்படுகிறது. 

 பாஜக காட்டிய எந்த பயமுறுத்தலுக்கும் எடப்பாடி அசராமல் நின்றதையும் கவனிக்க வேண்டி உள்ளது. அதனால்தானோ, இன்று 'இடைக்கால பொதுச்செயலாளர்' என்று அழைப்பிதழை டெல்லி நீட்டி வரவேற்.றுள்ளது.

ஒருங்கிணைந்த அதிமுக என்ற விருப்பத்தை பாஜக பலமுறை முன்வைத்தும், அதை எடப்பாடி தொடர்ந்து மறுத்த நிலையில், கடைசியில் எடப்பாடியின் பிடிவாதம்தான் வெற்றி பெற்றுள்ளதாகவே கருதப்படுகிறது..

 இதை தங்களுக்கான அதிகாரமாக நினைத்து அதிமுகவினரே கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இன்று மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒரு பேட்டி தந்துள்ளார். அதில், ' அதிமுக வலிமையாக இருக்கிறது என்பதற்கு, ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி, கட்சி சார்பாக அழைக்கப்பட்டுள்ளார்.. இது நமக்கு கிடைத்திருக்கிற பெரிய அங்கீகாரம்.. 

ஏன் என்றால், நம்மை மட்டும்தான் அழைத்திருக்கிறார்கள்.. இது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியாகும்' என்று கூறியுள்ளார்.

அதாவது, தருமர், ரவீந்திரநாத் போன்ற எம்பிக்கள் ஓபிஎஸ் சார்பாக டெல்லியில் இருக்கும் நிலையில், அந்த முறையிலும் சரி, எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற முறையிலும் சரி, ஓபிஎஸ் அழைக்கப்படவில்லை. 

இதைதான் செங்கோட்டையன் பிரத்யேகமாக சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது. ஆக, 6 மாத காலமாகவே பல்வேறு கசப்புகள் வெளிவந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தையும் தாண்டி, பாஜக தற்போது நெருங்கி வந்துள்ளதாகவே தெரிகிறது.. எவ்வளவுதான் மறைமுக அழுத்தங்களை தந்தாலும், எடப்பாடியை பாஜகவால் தவிர்க்க முடியாது என்பதே உண்மை.