ராமநாதபுரம் மாவட்டம்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய வழிபாட்டுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!!

 ராமநாதபுரம் மாவட்டம்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய வழிபாட்டுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சந்தைத் திடலில் வழிபாட்டுரிமை பாதுகாப்புஆர்ப்பாட்டம் பாபர் மஸ்ஜித் இடித்த நாளான டிசம்பர் 6ல்மத்திய மாவட்டத் தலைவர் பிரிமியர்இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இதில்மாநில துணைப் பொதுச் செயலாளர் S.சலீமுல்லாகான், தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் எம். ஜெய்னுல் ஆபிதீன், தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, எழுத்தாளர் மதிவாணன், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.இதில்பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு முன் 1991 ஆம் ஆண்டு வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991 அன்றைய ஒன்றிய அரசால் இயற்றப்பட்டது.நாடு விடுதலை அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் என்னென்ன நிலையில் இருந்தனவோ அதே நிலைதொடர வேண்டும்.அதுதான் அந்த சட்டத்தின் சாரம்பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு மற்றும் ஒரு கர சேவையாகவே அமைந்து உலகை உலுக்கியது. ஞான வாபி பள்ளிவாசலில் நீதிமன்றம் எடுத்து வரும் நிலைப்பாடுகளும் அச்சம் தருவதாகவே அமைந்துள்ளது. ஆகவே வழிபாட்டு தளங்கள் சட்டம் 1991 நடைமுறைப்படுத்த வேண்டும் என பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் வா வா ராவுத்தர், பட்டாணி மீரான், ஷேக் அப்துல்லா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தமுமுககட்சியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.இறுதியில் தமுமுக நகர தலைவர் முகமது அமீன் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவு பெற்றது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி