குடும்ப அட்டைதாரர்களுக்கு...’- கூட்டுறவுத்துறை புதிய உத்தரவு.....!

 குடும்ப அட்டைதாரர்களுக்கு...’- கூட்டுறவுத்துறை புதிய உத்தரவு.....!

தமிழ்நாட்டில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டை தாரர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடர்பாக சுற்றறிக்கையொன்று கூட்டுறவுத்துறை சார்பில் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டை தாரர்கள், வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவிப்பொன்றை பிறப்பித்திருந்தது. ஏற்கெனவே வங்கி கணக்கு வைத்திருப்போர்களிடம் பாஸ் புத்தகத்தின் நகல், அதில் குடும்ப தலைவர் பெயர் மற்றும், குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்றும் துறை அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

image

இந்நிலையில் தற்போது`ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களை சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் நேரில் சந்தித்து வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டும் போதுமானது என அறிவுறுத்த வேண்டும்’ என்று, அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை பதிவாளர் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மத்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற இலக்கை எட்டுவதற்காக ஜன்தன் வங்கி கணக்கு துவக்கப்பட்டதன் விளைவாக அனைவருக்கும் வங்கி கணக்கு உறுதி ஆகி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு இருப்பது தமிழக அரசுக்கு இப்போதுதான் தெளிவாக தெரிந்துள்ளது. அதனால்தான் தனது முந்தைய சுற்றறிக்கையை மாற்றி வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இதுதான் திராவிட Model ஆட்சியின் புதிய புரட்சி...!