இந்தி திணிப்பை எதிர்த்து ஓசூர் எம்எல்ஏ Y.பிரகாஷ், துண்டறிக்கை

 இந்தி திணிப்பை எதிர்த்து ஓசூர் எம்எல்ஏ Y.பிரகாஷ்,  துண்டறிக்கை


ஒசூர் பேருந்து நிலையம்,முக்கிய வீதிகளில் இந்தி திணிப்பை எதிர்த்து ஓசூர் எம்எல்ஏ Y.பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா ஆகியோர் மாணவர்கள்,வணிகர்கள்,பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கினர்..

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி இந்தி திணிப்பிற்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைப்பெறும் என திமுக தலைமை அறிவிப்பு செய்துள்ள நிலையில்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், நாளை ஒசூர் ராம்நகரில் மாவட்ட கழக செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான Y.பிரகாஷ் தலைமையில் இந்தி திணிப்பிற்கு எதிரான விளக்கக்கூட்டம் நடைப்பெற உள்ளநிலையில்

இன்று இந்தி திணிப்பிற்கு எதிரான துண்டறிக்கைகளை ஒசூர் மாநகர பேருந்து நிலையம் முதல் ராம்நகர், எம்ஜி சாலை,நேதாஜி சாலை என முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள்,வணிகர்கள்,பொதுமக்களுக்கு ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா அவர்கள் கூட்டாக வழங்கினர்..

Hosur Reporter. E. V. Palaniyappan