ஓசூரில் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.

ஓசூரில் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம், சார்பில் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் பி சந்திரன் பங்கேற்று கண்டன உரை ஆற்றினார். இதில் மாநகராட்சி ஊழியர்கள் நூற்றுக்கணக்கான பங்கேற்றனர்.

அப்போது, மக்களின் அடிப்படை பணிகள் செய்துவரும், தூய்மைபணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வழங்கல், தூய்மைப்பணி மேற்பார்வையாளர், வரிவசூலர், பதிவரை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுனர்கள் இரவு காவலர், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர், மருத்துவர்கள், நகர சுகாதார கருணை அடிப்படை பணிவாய்ப்புகள் இல்லாமல் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சியில் 35000க்கும் மேற்பட்ட பணியிடங்களை 3417 ஆக குறைக்கும் அரசாணை 20.10.2022-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதேபோல, ஓசூர் மாநகராட்சியில் சுமார் 10 வருடங்களாக தற்காலிகமாக 2001 பணி நியமனம் செய்த 88 பேருக்கு செவிலியர்கள், சமுதாய அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்களின் பணி பாதுகாக்கப்பட்ட, அடிப்படை கல்விதகுதி உடைய பட்டியலின மக்களின் அரசு வேலை மறுக்கப்படுவதுடன், பென்சன் வழங்கிட வேண்டும். 

மேலும் உங்களைப் போன்றவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அரசாணை 152-ஐ தமிழக அரசு மறுபரிசீலணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக முழக்கங்களை எழுப்பியவாறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பேட்டி : பி சந்திரன், மாவட்டத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்.

HOSUR  Reporter. E. V. Palaniyappan